தாலி கட்டியாச்சு.. பாவனிக்கு முத்தம் கொடுத்த அமீர்.. நாத்தனார் முடிச்சு போட்டது யார் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறிய அமீர் பாவ்னி ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்தது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் முக்கியமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், இருவரது உறவினர்களும் நண்பர்களும் பாராட்டினர். அமீர் - பாவனி திருமணத்தில் நாத்தனார் முடிச்சு போட்டது யார் என்பது ஆச்சரியம் அளித்திருக்கிறது. அவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி, பாசமலர் சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் பாவனி. தெலுங்கு, கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவர் தமிழ் சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். பின்னர் 2017ஆம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன ஒரே ஆண்டிலேயே பிரதீப் குமார் தற்கொலை செய்துகொண்டது பாவனிக்கு அதிர்ச்சியளித்தது. அதிலிருந்து மீண்டு வர பல நிகழ்ச்சிகளிலும், ஷோக்களிலும் நடித்து தன்னை பிஸியாக வைத்து கொண்டார். பின்பு ஒரு சில படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

பிக்பாஸில் கிடைத்த காதல்: கணவர் தற்கொலையில் இருந்து மீண்டு வந்த பாவனி 2021ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி தந்த அமீர் பாவனியை பார்த்ததும் காதல் வர தொடங்கியது. பின்பு பாவனியிடம் காதலை சொல்ல பலகட்ட முயற்சிகளை செய்திருக்கிறார் அமீர். பாவனிக்கும் அமீர் தன்னை காதலிப்பது தெரிந்தாலும் நட்போடு பழகி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில் திடீரென பாவனியின் கன்னத்தில் அமீர் முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலானது. அதற்கு பிறகு இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், நானும் அமீரும் நட்போடு தான் இருக்கிறோம் என பாவனி மறுத்தார்.
டான்ஸ் ஜோடி பட்டம்: பிறகு இதே பிக்பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். அமீரின் காதலுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இருந்தே உதவியாக இருந்தவர் தொகுப்பாளினி பிரியங்கா. அமீரின் காதலுக்கு பலவிதமாக பாவனியிடம் தூது சென்றிருக்கிறார். நடன நிகழ்ச்சியின் போதும் அமீரோடு பாவனியை சேர்த்து வைத்து கலாய்ப்பதும், கிசுகிசு வேலைகளை செய்தார் பிரியங்கா. இந்த நிகழ்ச்சியில் சிறந்த டான்ஸ் ஜோடியாக வெற்றி பெற்ற பின்னர், பாவனி அமீரை காதலிப்பதை சமூகவலைதளத்தில் தெரிவித்தார். இந்த காதல் ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. பின்னர் இருவரும் ஜோடியாக முதல் முறையாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்தனர்.

வெட்கப்பட்ட அமீர்: முதலில் காதல் சொன்னது யார் என கேட்டதும் அமீர் வெட்கப்பட்டார். பாவனி ரொம்ப விவரமான பொண்ணு என்னை ரொம்ப ஏங்க வைத்து விட்டாங்க. ரொம்ப க்யூட் என பேசி பாவனியை சிரிக்க வைத்தார். அந்த சிரிப்பில் விழுந்தவன் தான் இன்னும் எந்திரிக்க முடியலை என்றும் அமீர் கமெண்ட் அடித்தார். பின்னர் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தனர். அப்போது பிரபல பத்திரிகை நாளிதழுக்கு பேட்டி அளித்த பாவனி, நான் இந்து அமீர் முஸ்லீம் இருவரும் மதங்களை பார்த்து காதலிக்க வில்லை என பேசியிருந்தார்.

மதத்திற்கு அப்பாற்பட்ட காதல்: பிறகு பேசிய பாவனி, நாங்கள் இருவரும் பொங்கல் கொண்டாடுகிறோம். அமீர் நோன்பு வைக்கும் போது உதவியாக இருக்கிறேன். அவரை தொந்தரவு செய்வது கிடையாது. அதேபோன்று ரமலான் பண்டிகையை சேர்ந்து கொண்டாடுகிறோம். இதுவரை அமீர் என்னை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியது இல்லை. அவர் என்னை காதலிக்கிறார் மதத்தை அல்ல என வெளிப்படையாக பாவனி தெரிவித்தார். பிறகு பேசிய பாவனி, அமீர் மாதிரி ஒரு அற்புதமான மனிதரை நான் பார்த்தது இல்லை. என் வாழ்வில் கிடைத்த கிஃப்ட் ஆக பார்க்கிறேன். எனக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொள்கிறார். நான் அதிகம் கோபப்படும் நேரத்தில் அமைதியாக இருந்து நிதானமாக முடிவெடுப்பது ஆச்சரியம் அளித்திருக்கிறது. ஆரம்பத்தில் நான் கன்பியூசனில் இருந்தேன். ஏற்கனவே ஒரு வலியை கடந்து விட்டேன் மீண்டும் ஒரு காதல் வலியை தாங்க முடியாது என்பதை ஆரம்பத்திலேயே அமீரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் கொடுத்த நம்பிக்கை தான் இன்று வரை நீடிக்கிறது. தற்போது அது காதலாக மாறியிருக்கிறது. எங்களது காதல் மதத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. இதில் மதம் இரண்டாம் பட்சம்தான் என பாவனி கூறினார்.
போட்டோ ஷூட்: திருமண தேதியை அறிவித்த பின்னர் அமீரும் பாவனியும் கலகலப்பாக மாறிவிட்டனர். மிகவும் பிஸியாக இருந்தனர். இதற்கிடையில் பாவனி ஓம் காளி ஜெய் காளி வெப் தொடரிலும் நடித்து முடித்திருக்கிறார். அவரது கதாப்பாத்திரம் மிகப்பெரிய பாராட்டை பெற்றது. இந்நிலையில், இருவரும் இணைந்து திருமணத்திற்காக கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது. இருவரையும் புகழாத நபர்களே கிடையாது. திருமணத்திற்கு ரெடியான அமீர் -பாவனி ஜோடிக்கு நேற்று மாலை ஹால்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டதாக தெரிகிறது.

திருமணம்: நீண்ட நாள் காதலர்களாக இருந்து வந்த அமீர் -பாவனி ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு விஜே பிரியங்கா தான் முன்னிறுத்தி நடத்தி வைத்துள்ளார். தனது கணவருடன் வந்து கலந்துகொண்ட பிரியங்கா நாத்தனார் முடிச்சை அவர் தான் கட்டியுள்ளார். தாலி கட்டும் நேரத்தில் அமீர் பாவனிக்கு அன்பு முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், தனது தாயார் இறந்து போனதை ஏற்கனெவே பிபி நிகழ்ச்சியில் தெரிவித்து ரொம்ப எமோஷனல் ஆனார் அமீர். அம்மா இல்லாத குறையை இன்று பிரியங்கா தீர்த்து வைத்து விட்டார். பிபி நிகழ்ச்சியில் இருந்தே இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த பிரியங்கா - வசி திருமணத்திற்கு அமீர் - பாவனியும் ஜோடியாக சென்று வாழ்த்து தெரிவித்து வந்தனர். அமீர் - பாவனி திருமணம் கலைகட்ட தொடங்கியிருப்பதால் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பாவனிக்கு 36 வயது என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாவனியின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து நீடு வாழ்க என மனதார பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











