பிக் பாஸ் பிரபலம் ஜூலி சீரியல் பிரவேசம்.. என்னங்க கடைசியில இப்படி இறங்கிட்டீங்க.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை : நடிகை ஜூலி பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்று வீரத்தமிழச்சி என்ற பெருமையும் இருந்தது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடத் தெரியாமல் விளையாடி ரசிகர்களிடையே தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார்.
ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் பங்கேற்று மிகவும் தெளிவாக அவர் நடந்துக் கொண்டார்.

வீரத்தமிழச்சி ஜூலி
ஜல்லிக் கட்டுப் போராட்டம் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. வீரத்தமிழச்சி என்ற பெருமையுடன் பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்ற ஜூலி, அந்த போட்டியில் எப்படி பங்கேற்பது என்ற புரிதல் இல்லாமல் சொதப்பினார். இதன்மூலம் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார்.

ரசிகர்கள் ஆர்வம்
இதையடுத்து சினிமாவில் சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஜூலி, தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பதாக சில போஸ்டர்கள் வெளியாகின. ஆனால் அந்த புராஜக்ட்கள் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் ஜூலியை திரையில் பார்க்கும் ரசிகர்களின் ஆசை நிராசையானது.

தெளிவடைந்த ஜூலி
தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இவரது ஆட்டத்தில் இந்த முறை ஒரு தெளிவு காணப்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களை பெற்றார். சக போட்டியாளர்களிடமும் நல்ல பெயரை வாங்கினார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஜூலி. அடுத்தடுத்த போட்டோஷூட்களை எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன்மூலம் இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்மூலம் சினிமா உள்ளிட்ட வாய்ப்புகளை பெறும் முனைப்பில் உள்ளார் ஜூலி.

சீரியலில் ஜூலி
இந்நிலையில் தற்போது புதிய முயற்சியாக சீரியலிலும் நடிக்க இருக்கிறார் ஜூலி. ஆனால் சிறப்பு கேரக்டரில்தான் தோன்ற இருக்கிறாராம். ஜீ தமிழின் தவமாய் தவமிருந்து என்ற தொடரில்தான் ஜூலி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். தொடரில் மணப்பெண் கேரக்டரில் நாயகியின் தோழியாக இவர் நடித்துள்ளார். தற்போது இதன் ப்ரமோ வெளியாகியுள்ளது.

நாயகியின் தோழி
இந்தத் தொடரின் நாயகி மலர் கேரக்டரின் தோழி தாராவாக இவர் நடித்துள்ளார். இவருக்கு சினிமா, சின்னத்திரை என எந்த மீடியமும் கைக்கொடுக்காத நிலையில் சீரியல்களில் இவர் கவனம் செலுத்தலாமே என்ற கமெண்ட்டும் இதன்மூலம் எழுந்துள்ளது. விரைவில் இவரும் இந்த அதிரடி முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.
Recommended Video

திகைப்பில் மலரின் அப்பா
தவமாய் தவமிருந்து தொடர் ஜீ தமிழில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த வருகிறது. தற்போதைய எபிசோடில் ஆசையாய் வளர்த்த தன்னுடைய மகள், திருமணத்தில் எச்சில் இலையை எடுப்பதை பார்க்கும் மார்க்கண்டேயன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார். அப்பாவை பார்க்கும் மலரும் செய்வதறியாமல் திகைக்கிறார்.


Click it and Unblock the Notifications











