சேரெல்லாம் சைஸ் மாறிப் போச்சு.. பாத்ரூமுக்குள்ளேயே தம்மடிக்கலாம்.. புதுப் பொலிவுடன் பிக் பாஸ் வீடு!
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற உள்ள வீட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற உள்ள வீடு, என்னென்ன வசதிகளுடன், எப்படி இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
விஜய் டிவியில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டானதைத் தொடர்ந்து, தற்போது அதன் சீசன் 2 ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் சீசனைப் போலவே இதனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.
வரும் ஞாயிறு முதல் இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

புதிய செட்:
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2விற்கான வீடு எப்படி இருக்கும் என்பதை இன்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் செய்தியாளர்களை அழைத்துக் காண்பித்தனர்.முதல் சீசனுக்கு செட் போடப்பட்ட அதே பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியிலேயே இம்முறையும் பிக்பாஸ் வீடு செட் போடப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்கள்:
முதல் சீசனைப் போலவே 15 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் ஒரே குடும்பமாக வாழப்போகின்றனர். எனவே, அவர்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க அங்கு 60 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், பழைய வீட்டிலிருந்து இந்தப் புது வீடு பல மாற்றங்களோடு உள்ளது.

புதிய சேர்:
முதல் சீசனில் இருந்த கன்பெஷன் ரூமில் தற்போது மாற்றம் செய்துள்ளனர். இப்போது வேறு மாதிரியான பெரிய சைஸ் சேர் போடப்பட்டுள்ளது. வீட்டின் உள் அலங்காரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நீச்சல்குளம் அருகே:
புதிதாக வெளிப்புற பகுதியில் சில இருக்கைகள் போடப்பட்டுள்ளன. நீச்சல்குளத்திற்கு அருகேயும், முன்பு ஸ்மோக்கின் ரூம் இருந்த பகுதியிலும் இந்த புதிய இருக்கைகள் உள்ளது. இதேபோல், வெளிப்புறத்தில் சிறை போன்ற அமைப்பு ஒன்று புதிதாக உள்ளது.

கலர்புல்
தற்போது பாத்ரூமிற்கு உள்ளேயே ஸ்மோக்கிங் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. படுக்கை விரிப்புகளின் கலரும் மாற்றப் பட்டுள்ளது. சோபாக்கள், சுவர் அலங்காரங்கள் போன்றவற்றிலும் பழைய சீசனின் சாயல் தெரியாதவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications