மதுவை தற்கொலைக்கு தூண்டிய ‘கர்நாடகாக்காரன்’ சர்ச்சைப் பேச்சு இதுதான்.. நடிகை நளினி மகள் பதிவு வைரல்!
எவிக்சனுக்குப் பிறகு மதுமிதா கூறியதாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: கர்நாடகா விவகாரம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா அப்படி சர்ச்சைக்குரிய வகையில் என்ன கூறினார் என்பது குறித்து நடிகை நளினியின் மகள் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்கு காரணம், நிகழ்ச்சியின் விதிகளை மீறி அவர் தன்னை தானே வருத்திக்கொண்டது தான். அதாவது அவர் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதே முக்கிய காரணம்.
சனிக்கிழமை நிகழ்ச்சி தொடங்கியதுமே மதுமிதா வெளியேற்றப்பட்ட தகவலை பிக் பாஸ் தனது கம்பீர குரலில் அறிவித்தார். ஆனால் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட காட்சிகள் எதுவும் காட்டப்படவில்லை.

மதுமிதா
பின்னர் கமல் மேடைக்கு வந்த உடனே மதுமிதாவை அழைத்தார். அவரும் கையில் கட்டுடன் வந்து கமலின் காலில் விழுந்து வணங்கிவிட்டு, அவர் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போதும் மதுமிதா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு போனது ஏன் என தெளிவாக விளக்கப்படவில்லை.

இதுதான் காரணம்
சக போட்டியாளர்கள் தன்னை அவமானப்படுத்தியதாகவும், கேப்டன் பதவிக்கு தான் தகுதியானவள் அல்ல என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் மதுமிதா கூறினார். தன்னை நிரூபிக்க வேறு வழியே இல்லாமல் தான், தன்னை தானே வருத்திக்கொள்ளும் அளவுக்கு சென்றதாகவும் மது தெரிவித்தார்.

குழப்பம்
தான் சிறுவயதில் இருந்து ஆசைப்பட்ட விசயம் குறித்து ஹலோ டாஸ்க்கில் பேசியதாகவும், ஆனால் அதற்கு சக போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். எனவே, தான் பேசியதை நிரூபிக்க வேண்டி, இந்த தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அப்படி என்ன மதுமிதா பேசினார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.
நடிகை நளினி மகள்
இந்நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கான முக்கிய காரணம் என்ன என்பதை, நடிகை நளினியின் மகள் கூறியதாக ஒரு பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவரிடம் மது தொலைப்பேசியில் பேசியதாகவும், அப்போது மது தெரிவித்த கருத்துகள் தான் இவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா பிரச்சினை
அதன் படி, ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, "வருண பகவான் கூட கர்நாடககாரரோ. கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே", எனும் கருத்து கூறியதாக நளினி மகள் தெரிவித்துள்ளார். இதை கூறியதற்காகத் தான் சக போட்டியாளர்கள் மதுவை மிக மோசமாக நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சண்டை
மது தனது கருத்தை மிக உறுதியாக முன் வைக்கக்கூடியவர். எனவே இது தொடர்பான விவாதத்தில் அவர் மிக தீவிரமாக சொற்போர் நடத்தியிருக்கிறார். ஒருகட்டத்தில் தான் தனி ஆளாக மற்ற போட்டியாளர்களிடம் சண்டைபோட வேண்டிய சூழல் வந்ததால், அதை சமாளிக்க முடியாமல் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மது, தனது கையில் அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

பிக் பாஸ் முதலுதவி
இதையடுத்து அவரை பிக் பாஸ் குழுவினர் முதல் உதவி செய்து காப்பாற்றி இருக்கின்றனர். இருப்பினும் மது செய்தது தவறு தான் என நளினி மகள் எனக் கூறப்பட்டுள்ள அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு உண்மையிலேயே அவர் வெளியிட்டது தானா என்பது தெரியவில்லை. ஆனால், இது உண்மையாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குடும்ப நண்பர்
சரி, மதுமிதாவிற்கும், நடிகை நளினி குடும்பத்திற்கும் என்ன தொடர்பு நீங்கள் நினைக்கலாம். நடிகை நளினி தான் மதுமிதாவிற்கு திருமணம் நடத்தி வைத்தார். இதனை அவரே ஒருமுறை பிக் பாஸில் தெரிவித்திருந்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











