பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்துக்கு ஒரு வாரத்திற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Siva

Recommended Video

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்குபவர் ஸ்ரீஷாந்த் தான்- வீடியோ

மும்பை: இந்தி பிக் பாஸ் 12 வீட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு வாரம் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் 12 நிகழ்ச்சி அமோகமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் நாளில் இருந்தே சர்ச்சை, சண்டை என்று பரபரப்பாக உள்ளது.

பிக் பாஸ் 12 வீட்டில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

கோபம்

கோபம்

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் சக போட்டியாளரான சோமி கானுடன் ஸ்ரீசாந்துக்கு பிரச்சனை ஏற்பட்டது. அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் பிக் பாஸில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். அவர் வீராப்பாக கூறிவிட்டு ஏன் கிளம்பவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சம்பளம்

சம்பளம்

பிக் பாஸ் 12 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஸ்ரீசாந்துக்கு தான் அதிகம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. வாரத்திற்கு அவருக்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் சம்பளம் கொடுக்கிறார்கள். போட்டியாளர்களில் அவருக்கு தான் அதிக சம்பளம் என்பதற்கான ஆதாரங்களை டிவி சேனல் ஸ்ரீசாந்திடம் காண்பித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வீடு

வீடு

பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் கிளம்பினால் ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். அதனால் தான் ஸ்ரீசாந்த் கோபப்பட்டு பேசியபோதும் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருக்க முடிவு செய்தாராம். ஸ்ரீசாந்துக்கு என்ன டாஸ்க் வேண்டுமானாலும் கொடுங்க, ஆனால் அவரை மொட்டை மட்டும் போடுமாறு கூறாதீர்கள் என அவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி

செய்தி

பிக் பாஸ் 12 போட்டியாளர்களில் ஸ்ரீசாந்துக்கு தான் குறைவான சம்பளம். அவருக்கு வாரத்திற்கு ரூ. 5 லட்சம் அளிக்கப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன் பிறகே அவரின் உண்மையான சம்பள விபரம் தெரிய வந்துள்ளது. கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீசாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X