தமிழ் என்றால் நினைவுக்கு வருவது கருப்புக் கண்ணாடியும், மஞ்சள் துண்டுமே: சோகத்தில் பிக் பாஸ்
Recommended Video

கலைஞருக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் மௌன அஞ்சலி- வீடியோ
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வீடியோக்கள் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி காலமான செய்தியை தெரிவித்ததும் அவர்கள் அதிர்ச்சி அடையும் ப்ரொமோ வீடியோ வெளியானது.

பிக் பாஸ் கூறியதை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாக வந்து கைகொடுப்பேன் என்று கருணாநிதி கூறியதை நினைவுகூர்ந்தார் டேனி. தமிழ் என்று சொன்னாலே நினைவுக்கு வருவது கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும் தான் என்று பாலாஜி கூறும் ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications