ரம்யா, நித்யா, அனந்த், மமதி: ஒரு ஒற்றுமை இருப்பதை பார்த்தீங்களா?

By Siva

Recommended Video

Bigg Boss 2 |weekend highlights | மக்கள் ஓட்டா? இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்பவர்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி போர் அடிக்கிறது என்று சொல்லி சொல்லியே பார்வையாளர்கள் டயர்டாகிவிட்டார்கள். நிகழ்ச்சி எப்படா முடியும் என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் புலம்புகிறார்கள்.

இந்நிலையில் பார்வையாளர்கள் மட்டும் அல்ல போட்டியாளர்களுக்கும் போர் அடித்துவிட்டது தெரிகிறது.

ரம்யா

ரம்யா

பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட ரம்யா அப்பாடா விட்டா போதும்டா சாமி என்ற ரேஞ்சில் மகிழ்ச்சியாக சென்றுவிட்டார். எனக்கு போக வேண்டும் என்று ஆசை என ரம்யா கூறியதும் அவரை வெளியே வருமாறு அழைத்தார் கமல். கமல் கையில் உள்ள கார்டில் தனது பெயரை பார்த்த ரம்யா ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறி சிரித்தார். அவர் சிரிப்பு பொய் அல்ல.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

சண்டையை பார்த்தால் அங்கிருந்து ஓடிப் போக வேண்டும் என்று நினைப்பவள் நான். அதனால் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று இருந்தது.
இந்த வீட்டில் நிறைய பொய், போலி இருக்கிறது. இது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் ரம்யா. அவர் கிளம்பியதால் மும்தாஜ், வைஷ்ணவி, ஜனனி உள்ளிட்ட சக போட்டியாளர்கள் தான் அழுதார்கள். ரம்யா கடைசி வரை அழவில்லை.

நித்யா

நித்யா

ரம்யா மட்டும் அல்ல மமதி சாரி, அனந்த் வைத்தியநாதன், நித்யா ஆகியோரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றபோது மகிழ்ச்சியாக சென்றார்கள். இது பெரிய வாய்ப்பு அப்படி இப்படி பேசினாலும் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற எண்ணமே அவர்களிடம் மேலோங்கி இருந்தது.

கதவுகள்

கதவுகள்

பார்வையாளர்கள் நிகழ்ச்சி எப்படா முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள், போட்டியாளர்களோ பிக் பாஸ் வீட்டின் கதவு திறந்து நாம் என்று நம் வீட்டிற்கு செல்வோம் என்று காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல போட்டியாளர்களுக்கும் போர் அடிக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஏதேதோ செய்து பார்க்கிறார்கள். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X