பிக் பாஸ் ஷூட்டிங் தொடர்ந்து நடக்குமா, கமல் தொடர்வாரா?- ஆர்.கே. செல்வமணி விளக்கம்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வெளிமாநிலத்தவர்களை அதிக அளவில் பணியமர்த்தியதால் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பெரிய செட் போட்டு நடக்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் வேலை செய்வதால் ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆட்சேபனை தெரிவித்தார்.
இந்த காரணத்தால் பிக் பாஸ் ஷூட்டிங் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டது. கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று செல்வமணி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் இது குறித்து செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஃபெப்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியால் தயாரிப்பாளர் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சிக்கும் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் புரிதல் இல்லாததால் குழப்பமான சூழல் ஏற்பட்டது.

ஒப்பந்தம்
முறையான தொடர்பு இல்லாததால் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது குஷ்பு வெளிநாடு சென்றிருந்தார். குஷ்பு நாடு திரும்பியதும் என்ன பிரச்சனை என்று என்னிடம் கேட்டார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஃபெப்சிக்கும் இடையே ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை பின்பற்றினால் போதும் என்றோம்.

தீர்வு
குஷ்பு சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் பிரச்சனையை தீர்த்து வைத்துவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எத்தனை பேர் வேலை செய்ய வேண்டும், என்ன மாதிரியான வேலை செய்ய வேண்டும் என்று சுமூகமாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

யூனியன்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது என்று ஃபெப்சி முடிவு செய்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இனி எந்த பிரச்சனையும் இன்றி நடக்கும். எங்களிடம் 23 யூனியன்கள் உள்ளது. அதில் 7 யூனியன்களை அவர்கள் கண்டிப்பாக பணியமர்த்த வேண்டும். மீதமுள்ள யூனியன்களை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொண்டால் போதும் என்றார் ஆர்.கே. செல்வமணி.


Click it and Unblock the Notifications











