முதலில் லிப் டூ லிப், இப்ப படுக்கை வேறயா?: என்ன நடக்குது பிக் பாஸ்?
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் என்னங்கடா நடக்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது.
பிரிந்து வாழும் மனைவி நித்யாவை எப்படியாவது சமாதானம் செய்து ஒன்று சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தாடி பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இதை அவரே தெரிவித்துள்ளார். ஆனால் நித்யா அந்த எண்ணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

நித்யா
பாலாஜி விட்டுக் கொடுத்து நடந்தாலும் நித்யா கோபமாகவே நடந்து கொள்கிறார். கேரட் பொறியலில் வெங்காயம் போட்டால் நன்றாக இருக்கும் என்று பாலாஜி கூறினார். அவர் கூறிய ஒரே காரணத்திற்காக வெங்காயம் போட மாட்டேன் என்று அடம் பிடித்த நித்யாவை பார்த்து முகம் சுளிக்காதவர்களே கிடையாது.

மனைவி
பாலாஜி தனது மனைவி நித்யாவின் கன்னத்தில் செல்லமாக தட்டும்போது கூட அவர் கோபமாகவே பார்க்கிறார். ஜோக்ஸ் சொன்னால் சிரிக்கிறார் ஆனால் சாதாரணமாக பாலாஜி எது சொன்னாலும் நித்யாவுக்கு பிடிப்பது இல்லை.
கோபம்
நித்யாவை சமாதானம் செய்யும் வேலையில் தான் பாலாஜி குறியாக உள்ளார். இந்நிலையில் பாலாஜி நித்யாவால் கோபப்படுவது போன்ற ப்ரொமோ வீடியோ ஒன்று இன்று வெளியாகியுள்ளது.

மீடியா
ஒருத்தருடைய புகைப்படத்தை காட்டி என் மனைவிக்கு இவருடன் கள்ளத்தொடர்பு உள்ளது என்று மீடியாவில் சொல்லியிருக்கிறார் பாலாஜி. எந்த கணவர் இப்படி செய்வார் என்று சென்றாயனிடம் கூறி கண்கலங்கியுள்ளார்.

இரவு
இன்று இரவு படுக்கையை ஷிப்ட் செய்யலாமா என்று ஐஸ்வர்யா யாஷிகாவிடம் கேட்க தாடி பாலாஜி வெட்கப்படுகிறார். அவர்கள் கூறுவது தாடி பாலாஜி, நித்யா படுக்கையை மாற்றுவது பற்றி. லிப் டூ லிப் முத்தம் இப்ப படுக்கை மாற்றமா, நல்லா வருவீங்க பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











