பிக் பாஸ் 2 என்று துவங்குகிறது, செட் எங்கே போடப்பட்டுள்ளது: விபரம் இதோ...
சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி என்று முதல் ஒளிபரப்பாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும் அதை பலரும் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அடுத்த சீசன் துவங்க உள்ளது. முதல் சீசனை போன்றே இதுவும் 100 நாட்கள் நடக்கும்.
கமல் ஹாஸன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

பிக் பாஸ் வீடு
சென்னை-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் பிக் பாஸ் வீட்டிற்கான செட் போடும் பணிகள் நடந்து வருகிறது. அந்த செட்டில் வைத்து ப்ரொமோ வீடியோவும் எடுத்துள்ளனர்.

வீடியோ
கமல் ஹாஸன் கலந்து கொண்ட ப்ரொமோ வீடியோ ஜூன் 3ம் தேதி வெளியிடப்படுகிறதாம். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஜூன் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார், யார் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாட்கள் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

மய்யம்
வார இறுதி நாட்களில் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால் கமல் ஹாஸனின் கட்சி பணிகள் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











