ஒரு வழியா மக்களின் ‘ஆசை’ நிறைவேறப் போகுது!

பிக் பாஸ் வீட்டின் புதிய போட்டியாளர் ஆகிறார் நடிகை விஜயலட்சுமி.

By Jaya Chitra

Recommended Video

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாயகி நடிகை விஜயலட்சுமி- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டின் முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை விஜயலட்சுமி இன்று இணைகிறார்.

கடந்த சீசனை விட இம்முறை பிக் பாஸ் போட்டியாளர்களின் தேர்வு சரியில்லை என்பதே மக்களின் குறையாக உள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பு இன்றி நகர்ந்து வருகிறது. கடந்த சீசனை பார்த்த அனுபவத்தில் போட்டியாளர்கள் மிகவும் கவனமாக விளையாடி வருவதால், பரபரப்பு ஏதுமின்றி நிகழ்ச்சி உள்ளது.

இதனால் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு எண்டிரியாக யாராவது வந்தால் தான் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு கூடும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

அமைதி:

அமைதி:

கடந்த சில வாரங்களுக்கு முன்னரே வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் யாராவது பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 66 நாட்கள் கடந்தும் தொடர்ந்து பிக் பாஸ் அமைதி காத்து வந்தார்.

வதந்தி:

வதந்தி:

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் நடிகை கஸ்தூரி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அது வதந்தி என்பது பின்னர் தெரிய வந்தது. கஸ்தூரியும் இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரி:

முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரி:

இந்நிலையில், இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் ப்ரோமோவில், நடிகை விஜயலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்குள் நடனம் ஆடிக் கொண்டே நுழைவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பிக் பாஸ் வீட்டின் முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரி விஜயலட்சுமி தான் என்பது உறுதியாகியுள்ளது.

நாயகியின் நாயகி:

நாயகியின் நாயகி:

சென்னை 28 உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. பிரபல இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், சன் டிவியில் பிரைம் டைம் சீரியலான ‘நாயகி'யில் நாயகியாக நடித்து வந்தார். சமீபத்தில் தான் அதில் இருந்து விலகினார். மக்களின் வரவேற்பைப் பெற்ற அந்த சீரியலில் இருந்து அவர் ஏன் திடீரென விலகினார் என்ற சந்தேகம் அவரது ரசிகர்களிடையே எழுந்தது.

பதில்:

அப்போது, ‘மக்களிடம் இத்தனை பெரிய வரவேற்பினை பெற்ற சீரியலில் இருந்து விலகுவதற்கு பின்னால் மிகப்பெரிய ஒரு விஷயம் இருப்பதாகவும், தொடர்ந்து மக்களின் அன்பு தனக்கு வேண்டும்' எனவும் அவர் விஜயலட்சுமி கூறியிருந்தார். தற்போது அந்த மிகப் பெரிய விஷயம் என்ன என்பதற்கு பதில் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் :

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘பிக் பாஸ் வீட்டில் நான் நானாக இருப்பேன்' என விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய அனுபவத்தை பெறப்போகும் விஜயலட்சுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X