இனி தினமும் இந்த குட்டிச் செல்லத்துக்கு ஒரு குட்மார்னிங் பார்சல் கன்பார்ம்!
சென்னை: பிக் பாஸ் வீட்டின் புதிய போட்டியாளராக இணைய இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.
பிக் பாஸ் வீட்டில் தற்போது ஐந்து பெண் போட்டியாளர்களும், நான்கு ஆண் போட்டியாளர்களும் உள்ளனர். இந்நிலையில், முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகை விஜயலட்சுமியும் பிக் பாஸ் போட்டியாளராகிறார்.
இயக்குநர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி சென்னை 28 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஒரு வயதில் நலன் என்ற மகன் இருக்கிறான்.

நித்யாவின் மகள்:
கடந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளர்களில் யாருக்கும் சிறு குழந்தைகள் இல்லை. ஆனால் இம்முறை பாலாஜியின் மனைவியும், பிக் பாஸ் போட்டியாளருமான நித்யா தனது மகளை பிக் பாஸ் வீட்டில் மிகவும் மிஸ் செய்தார்.

குட்மார்னிங்:
பள்ளி செல்லும் சிறுமியான போஷிகாவை பிரிந்து மிகவும் வேதனைப்பட்டார் நித்யா. தினமும் காலையில் எழுந்ததும் மறக்காமல் தன் மகள் போஷிகாவிற்கு கேமரா வாயிலாக குட்மார்னிங் சொல்வது நித்யாவின் வழக்கம். இதனால் வேக்கப் சாங் முடிந்ததும் தவறாமல், குட்மார்னிங் போஷிகா என்ற நித்யாவின் குரல் நிகழ்ச்சியில் ஒலிக்கும்.

ஐஸ்வர்யா:
நித்யா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் மக்கள் இந்தக் குரலை மிகவும் மிஸ் செய்தார்கள். ஷாரிக் வெளியேறிய சில நாட்களுக்கு, நித்யா பாணியில், குட்மார்னிங் ஷாரிக் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் அதுவும் காணாமல் போனது.

நிலனுக்கு ஒரு குட்மார்னிங்:
இந்த சூழ்நிலையில் பிக் பாஸ் வீட்டின் புதுவரவான விஜயலட்சுமிக்கு ஒரு வயதில் நிலன் என்ற மகன் இருக்கிறான். மகன் மற்றும் குடும்பத்தாரை விட்டு இன்னும் முப்பது நாட்கள் அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும். எனவே, நிச்சயம் அவர் தன் குட்டி மகனை பிக் பாஸ் வீட்டில் மிஸ் செய்வார். இதனால், இனி தினமும் காலையில் குட்மார்னிங் நிலன் குரல் பிக் பாஸ் வீட்டில் கேட்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











