அப்போ காதல் கோட்டை.. இப்போ ஓட்டு வேட்டை.. மகளுக்காக களத்தில் இறங்கிய அகத்தியன்!

தன் மகள் விஜயலட்சுமிக்கு ஓட்டு போடுங்கள் என இயக்குனர் அகத்தியன் மக்களை கேட்டுள்ளார்.

Recommended Video

விஜயலட்சுமிக்காக ஓட்டு கேட்கும் தந்தை இயக்குனர் அகத்தியன்

சென்னை: பிக் பாஸ் 2 தமிழில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ள தனது மகள் விஜயலட்சுமியை காப்பாற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென இயக்குனர் அகத்தியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பாதியில் வந்து இணைந்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் பிரபல திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள்.

Bigg boss 2 tamil: Ahathian campaigns for Vijayalakshmi

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் முடிகிறது. கலந்துகொண்ட போட்டியாளர்களில் பெரும்பாலானோர் வெளியேறிவிட்ட நிலையில், பாலாஜி, விஜயலட்சுமி, ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா ஆகிய ஆறு பேர் மட்டும் தான் எஞ்சியுள்ளனர்.

இவர்களில் டாஸ்க் ஒன்றில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதி வாரத்துக்கான கோல்டன் டிக்கெட்டை ஏற்கனவே கைப்பற்றிவிட்டார் ஜனனி. இந்த வாரம் அனைவருமே நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Bigg boss 2 tamil: Ahathian campaigns for Vijayalakshmi

இந்நிலையில், தனது மகளுக்காக ஓட்டு வேட்டை நடத்த தொடங்கியிருக்கிறார் இயக்குனர் அகத்தியன். தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு இயக்குனராக இல்லை அப்பாவாக இந்தப்பதிவு. மகளுக்காக வாக்களிக்க தங்களிடம் கேட்பதில் மகிழ்வும் பெருமையும். விருப்பம் தங்களை சார்ந்தது. நன்றி", எனக் கூறியுள்ளார்.

அப்பாவுக்காக மகளை காப்பாற்ற பார்வையாளர்கள் முன்வருவார்களாக என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X