ஐஸ் பயப்படுறதப் பார்த்தா... நமக்கும் ‘அந்த’ சந்தேகம் வருதே மக்களே!
சகபோட்டியாளர்களால் நாமினேட் செய்யப்படுவதற்கு முரண்டு பிடித்தார் ஐஸ்வர்யா.
Recommended Video

சென்னை: கமல் பரிந்துரைத்த பின்னரும் தன்னை மற்றவர்கள் நாமினேட் செய்யக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார் ஐஸ்வர்யா.
கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு, மக்களிடையே அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப் பட்டார் ஐஸ்வர்யா. இதுவரை ஒரு வாரம் கூட நாமினேசனுக்குப் போகாமல் பிக் பாஸ் அவரைப் பல்வேறு வழிகளில் காப்பாற்றி வந்தார்.
பின்னர் இதுவே அவரது மைனஸ் ஆனதால், கடந்த வாரம் அவரும் களத்தில் இறக்கப்பட்டார்.

எதிர்பார்ப்பு:
கடந்த வாரம் செண்டுவை ஏமாற்றியது, அதற்கு முந்தைய வாரங்களில் அவர் நடந்து கொண்ட விதம் என ஐஸ்வர்யா மீது மக்கள் செம கடுப்பில் இருந்தனர். எனவே, எப்படியும் அடுத்த வாரம் அவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

வெளியேறிய செண்டு:
ஆனால், கமலே அதிர்ச்சி அடையும் வகையில் அவர் காப்பாற்றப்பட்டு, இறுதிச்சுற்று வரை வந்து பிக் பாஸ் பட்டத்தைத் தட்டிச் செல்லும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்ட செண்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு மக்கள் வாக்களித்தது தான் காரணம் எனக் கூறப்பட்டது.

கமலின் விருப்பம்:
ஆனாலும் போங்கு ஆட்டம் ஆடிய ஐஸ்வர்யாவிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுவது தான் சரியான முடிவு எனக் கருதிய கமல், இந்த வாரம் அவரை நாமினேட் செய்வதாக அறிவித்தார். ஆனாலும், போட்டியாளர்கள் மட்டுமே சக போட்டியாளர்களை நாமினேட் செய்ய முடியும் என்பதால், இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்தார் பிக் பாஸ்.

போராடிய ஐஸ்வர்யா:
அதன்படி, கமல் பேச்சுக்கு மரியாதை தரும் விதமாக இந்த வாரமும் ஐஸ்வர்யாவை நாமினேசன் செய்ய வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருந்தது. ஆனால் இதற்கு ஐஸ்வர்யா ஒப்புக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் இதற்காக போட்டியாளர்களிடம் போராடினார்.

மக்கள் ஆதரவு:
கடந்த சீசனில் ஓவியா இருந்தவரை அவர் தான் அதிகம் நாமினேட் செய்யப்பட்டார். அதற்காக அவர் கவலைப்பட்டதேயில்லை. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் அவரைக் காப்பாற்றினர்.

சந்தேகம்:
அந்தவகையில் தற்போது ஐஸ்வர்யாவிற்கும் மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது போல் கடந்த வாரம் காட்டப்பட்டது. ஆனால் இது குறித்து ஐஸ்வர்யா சந்தோசப்பட்டதாகத் தெரியவில்லை. அதோடு இந்த வாரம் அவர் நாமினேசனுக்கு ஒத்துழைக்காததைப் பார்க்கும்போது, கடந்த சீசன் போட்டியாளர் காஜல் கூறியது போன்று அன்று காட்டப்பட்டது போலி வாக்கு முடிவுகளோ என்ற சந்தேகம் நமக்கும் வருகிறது.


Click it and Unblock the Notifications











