இந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பாலாஜி வெளியேறுகிறார் எனக் கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யாஷிகாவும், பாலாஜியும் தான் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் ரித்விகா, விஜி, யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் பாலாஜி என ஆறு போட்டியாளர்கள் உள்ளனர்.
இவர்களில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என கடந்த வாரமே கமல் கூறினார்.

ஜனனி சேஃப்:
சுத்தி சுத்தி வந்தீக டாஸ்க்கில் வென்று நேரடியாக இறுதிச் சுற்றிற்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டைப் பெற்றுள்ளார் ஜனனி. எனவே அவர் இந்த வாரம் நாமினேசனில் இல்லை. எனவே, அவரைத் தவிர மற்ற ஐந்து பேருமே நேரடியாக இந்த வாரம் நாமினேசனுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

ரித்விகா:
இவர்களில் நிச்சயம் இந்த வாரம் ரித்விகா வெளியேற வாய்ப்பில்லை. கடந்த வாரம் அவரது மற்ற போட்டியாளர்களைவிட மிக மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காப்பாற்றப்பட்டார். எனவே, மக்களிடம் அவருக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஐஸ்வர்யா:
மக்களுக்கு ரித்விகாவைப் பிடிக்கும் என்றால், பிக் பாஸிற்கு ஐஸ்வர்யாவைத் தான் பிடிக்கும். எனவே, கடந்த இரண்டு வாரங்களாக மக்களின் எதிர்ப்பை மறைத்து அவர்களைக் காப்பாற்றினார் பிக் பாஸ். எனவே இந்த வாரமும் அவர் வெளியேற்றப்பட வாய்ப்பில்லை.

பாலாஜி கன்பார்ம்:
அப்படியென்றால், ஜனனி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா தவிர மீதமிருப்பவர்கள் யாஷிகா, விஜயலட்சுமி மற்றும் பாலாஜி தான். இவர்களில் நிச்சயம் பாலாஜி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாஜியுடன் வெளியேறப் போவது யார் என்பது தான் கேள்வியாக உள்ளது. அது விஜி அல்லது யாஷிகாவாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த 4 பேர்:
கடந்த சீசனில் நான்கு ஆண்கள் மட்டுமே இறுதிச்சுற்றில் இருந்தனர். அதேபோல், பாலாஜி வெளியேற்றப்பட்டு இந்த சீசனில் இறுதிச்சுற்றில் நான்கு பெண்கள் மட்டுமே இருப்பர் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











