அப்போ முடியை வெட்டுனது எல்லாம் வேஸ்ட் தானா பிக் பாஸ்?
ஐஸ்வர்யா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் எனக் கூறப்படுகிறது.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முடியும் தருவாயில் உள்ளது பிக் பாஸ் சீசன் 2. ஆனால் இப்போது தான் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. வேண்டாத மருமகள் கைபட்டாலும் குத்தம், கால் பட்டாலும் குத்தம் என எதற்கெடுத்தாலும் போட்டியாளர்கள் அடித்துக் கொள்கிறார்கள்.
எப்படியும் இனி வைல்ட் கார்ட் மூலம் புதியவர்கள் யாரும் பிக் பாஸ் வீட்டிற்கு வரப்போவதில்லை. அப்படி இருக்கையில் தற்போதுள்ள எட்டு பேரில் இருந்தும் ஒருவர் இந்த வாரம் வெளியேறப் போகிறார்.

ஐஸ்வர்யா தான்:
இந்த சூழ்நிலையில் இந்த வாரம் செண்ராயன், ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களில் அநேகமாக ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்களும் இதனை உறுதி செய்கின்றன.

குறைவான ஓட்டு:
கருத்துக்கணிப்புகளும் இதையே கூறுகின்றன. மற்ற போட்டியாளர்களை விட ஐஸ்வர்யா தான் குறைவான ஓட்டுகள் பெற்றுள்ளார். எனவே டேனிக்கு அளித்த வாக்குறுதிப்படி பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறுவது உறுதி எனக் கூறப்படுகிறது.

பிக் பாஸ் திட்டம்:
ஆனாலும் மக்கள் எதிர்ப்பார்க்காத விதமாக சில நேரத்தில் டிவிஸ்ட் வைப்பது தான் பிக் பாஸின் ஸ்டைல். எனவே, கடைசி நேரத்தில் ஐஸுவைக் காப்பாற்றி வேறு யாரையாவது பிக் பாஸ் வெளியேற்றலாம். ஆனால், நிச்சயம் செண்டு இன்று சேவ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்தாஜ் மீதும் கோபம்:
இப்படியாக இன்று ஐஸ்வர்யா வெளியேறினால், இறுதிச் சுற்றில் மும்தாஜ், செண்டு மற்றும் ரித்விகா இடையே கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. இந்த வாரம் மும்தாஜும் ரித்விகாவுக்கு உதவாமல் மக்களின் எதிர்ப்புகளைச் சம்பாதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











