“உயிரே போய்விடும்”.. மும்தாஜ் பயப்படும் டாஸ்க்கை செண்டுவுக்காக செய்யத் துணிந்த ஐஸ்வர்யா!
செண்டுவை நாமினேசனில் இருந்து காப்பாற்றுவதற்காக தனது முடியை வெட்டிக் கொள்கிறார் ஐஸ்வர்யா.
Recommended Video

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீடே சலூனாக மாறி விடும் அளவிற்கு, முடி சம்பந்தப்பட்ட விதவிதமான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் சீசன் 2 முடிய சில வாரங்களே உள்ளன. இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா, மும்தாஜ், சென்ராயன், விஜயலக்ஷ்மி, ஜனனி என 5 பேர் உள்ளனர்.
இந்நிலையில் 79 நாட்களாக ஒரே வீட்டில் தங்கி இருக்கும் போட்டியாளர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்போக்கு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வித்தியாசமான டாஸ்க்குகளை அளித்து வருகிறார் பிக் பாஸ்.

ஹேர் கலரிங்:
அதன்படி, ஐஸ்வர்யாவுக்காக செண்ட்ராயன் சிவப்பு நிறச் சாயம் முடியில் பூசிக் கொள்ள வேண்டும் என்பது பிக் பாஸ் கொடுத்த டாஸ்க். இதை நேரடியாக சொல்லி இருந்தாலே செண்டு செய்திருப்பார். ஆனால், தன்னைச் சுற்றி இருப்பவர்களை நம்பாமல், செண்டுவிடம் நாடகமாடி தன் காரியத்தை சாதித்துக் கொண்டார் ஐஸ்.

பாலாஜிக்கு மொட்டை:
ஆனாலும் அவரது சாயம் ஜனனியின் டாஸ்க் மூலம் அம்பலமானது. பிக் பாஸ் அவருக்கு பாலாஜிக்கு மொட்டையடிக்க வேண்டும் என்ற டாஸ்க்கை அளித்தார். பாலாஜியை இந்த டாஸ்கிற்கு சம்மதிக்க வைப்பதன் மூலம் அடுத்த வார நாமினேசனில் இருந்து ஜனனி காப்பாற்றப்படுவார் என பிக் பாஸ் அறிவித்தார்.

சமாளிப்பு:
இதன் மூலம், ஐஸ்வர்யா செண்டுவை ஏமாற்றியது தெரிய வந்தது. தான் ஏமாற்றப்பட்டது அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தார் செண்டு. ஆனால், தான் ஏமாற்றினோம் என்பதை ஒப்புக் கொண்டால், அனைவரிடமும் அவப்பெயரைச் சந்திக்க நேரிடும் என கருதிய ஐஸ்வர்யா, தன் பங்கிற்கு ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

செண்டுவுக்கு உறுதி:
அதோடு, நிச்சயம் செண்டுவிற்கு அளிக்கப்படும் டாஸ்க்கை தான் செய்து பதில் உதவி செய்வேன் என உறுதி அளித்தார். அது தன் எதிர்கால வாழ்க்கைக்கு ஆபத்தாக இருந்தாலும் அதனை நிச்சயம் செய்வேன் என அவர் அப்போது தெரிவித்தார்.

மும்தாஜ்:
அதன்படி, இன்றைய நிகழ்ச்சியில் செண்டுவிற்காக அவர் தனது முடியை வெட்டிக் கொள்கிறார். இதனைப் பார்த்து மும்தாஜ், ‘2 இன்ச் முடியை வெட்ட சொன்னாலும் எனக்கு உயிரே போற மாதிரி இருக்கும்' என சொல்கிறார்.

ஓவியாவின் ஹேர்ஸ்டைல்:
கடந்த சீசனில் மிகவும் பிரபலமான ஓவியா, நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் செய்து கொண்ட ஹேர்கட் மிகவும் பேசப்பட்டது. ஓவியா ஹேர்கட் என பலரும் அவ்வாறு முடியை வெட்டிக் கொண்டனர். எனவே, தனது நீள முடியை செண்டுவிற்காக வெட்டிக் கொள்ளும் ஐஸ்வர்யாவும், புதிய ஹேர்ஸ்டைலை பார்வையாளர்களுக்கு பரிசாகத் தருவார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











