போன சீசனில் ஓவியா... இந்த சீசனில் ஆரவிடம் ‘மருத்துவ முத்தம்’ வாங்கியது யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 2விலும் மருத்துவ முத்தம் தந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் ஆரவ்.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் முதல் சீசன் வெற்றியாளரான ஆரவ்.
கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் நடிகர் ஆரவ். தற்போது அவர் சில தமிழ்ப் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.

ஆரவ்:
இந்த நிகழ்ச்சி முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், முதல் சீசன் போட்டியாளர்களான சினேகன், வையாபுரி, காயத்ரி, ஆரத்தி மற்றும் சுஜா ஆகியோர் கடந்த வாரம், பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரவும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார்.

அட்வைஸ்:
இரண்டு சீசன் போட்டியாளர்களும் தங்களது அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இரு பிரிவினருக்குமிடையே ஜாலியான போட்டிகளும் நடத்தப்பட்டது. சீனியர்கள் ஜூனியர்களுக்கு நிறைய அறிவுரை வழங்கினர்.

பெண் வேடம்:
இந்நிலையில் நேற்று திடீரென பாலாஜிக்கு பெண் போட்டியாளர்கள் சேர்ந்து சேலை கட்டி பெண் வேடமிட்டனர். பின்னர் அவரை ஆரவ்விற்கு முன் அழைத்துச் சென்று அவருக்கு ‘மருத்துவ முத்தம்' தரும்படி சொன்னர். அவரும் மறுக்காமல் பாலாஜிக்கு முத்தம் தருவது போல் நடித்தார்.

மருத்துவ முத்தம்:
ஏற்கனவே போன சீசனில் இவர் ஓவியாவிற்கு கொடுத்த முத்தம் மிகவும் பிரபலமானது. அந்த முத்தத்திற்கு ‘மருத்துவ முத்தம்' எனப் பெயரிட்டதே, நடிகர் கமல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











