எப்போதும் விஜி மீது ஒரு கண் வைத்திருக்கும் பாலாஜி.. இதற்காகத் தான்!

இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி.

By Staff

Recommended Video

Bigg Boss 2 Tamil Highlights | விஜயலக்ஷ்மி - ஐஸ்வர்யா யுத்தம் ஆரம்பம். டார்ச்சருக்கே டார்ச்சரா?

சென்னை: சக போட்டியாளர் விஜி மீது எப்போதும் முன்னெச்சரிக்கையாக தான் ஒரு கண் வைத்திருப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளராக வந்திருப்பவர் நடிகை விஜி. வந்தது முதலே தான் திறமையான போட்டியாளர் என நிரூபித்து வருகிறார். ஒவ்வொரு டாஸ்க்கில் தனித்தன்மையோடு விளையாடி பார்வையாளர்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

சக போட்டியாளர்களைப் பற்றி புறணி ஏதும் பேசாமல், அதே சமயம் தன்னை வம்பிழுப்பவர்களையும் ஒரு கை பார்ப்பது என விஜியின் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களாலேயே பாராட்டும்படி உள்ளது.

வித்தியாசமான டாஸ்க்:

வித்தியாசமான டாஸ்க்:

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆறு போட்டியாளர்களில் யார் இரண்டு பேர் இறுதிச்சுற்றுக்குச் செல்லத் தகுதியானவர்கள் இல்லை என ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும் என்ற வித்தியாசமான டாஸ்க்கை நேற்று பிக் பாஸ் அளித்தார். அதன்படி ஒவ்வொருவரும் தங்கள் மனதில் இருந்த இரண்டு பேரின் பெயர்களைக் கூறினார்கள்.

விஜியைச் சொன்ன பாலாஜி:

விஜியைச் சொன்ன பாலாஜி:

அப்போது பேசிய பாலாஜி, விஜியின் பெயரைக் குறிப்பிட்டார். மேலும், வந்த நாள் முதல் துறுதுறுப்பாக இருப்பதாக விஜியைப் பாராட்டிய அவர், ஏற்கனவே வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு வாழும் நிலையில் இவர் வேறு என்னென்ன செய்யப் போகிறாரோ என அஞ்சியதாகக் கூறினார்.

காரணம் இது தான்:

காரணம் இது தான்:

அதோடு, டாஸ்க் என பிக் பாஸ் அறிவித்ததுமே உடனடியாக தயாராகி விடுவார் என விஜி பற்றிக் கூறிய பாலாஜி, இதனாலேயே அவர் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பதாகக் கூறினார். பிக் பாஸ் வீட்டிற்கு 70 நாட்களுக்குப் பிறகு வந்த போட்டியாளர் என்பதைத் தவிர்த்து தன் மீது வேறு எந்த குறையும் சக போட்டியாளர்கள் கூற முடியாத அளவிற்கு விளையாடி வருகிறார் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டு:

குற்றச்சாட்டு:

இது ஒருபுறம் இருக்க 90 நாட்களுக்கு மேலாக ஒரே வீட்டில் உள்ள போதும், இன்னும் ஐஸ்வர்யாவைப் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதே ரித்விகா, பாலாஜி போன்றோரின் குற்றச்சாட்டாக இருந்தது. அதனாலேயே அவர் இறுதிச்சுற்றிற்கு செல்லக் கூடாது என்பது அவர்களது வாதமாக அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X