பாலாஜிக்கும் மனைவிக்கும் சண்டை, ஜனனி-மும்தாஜ் மோதல்: பரபரக்கும் பிக் பாஸ்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சண்டை நடப்பது போன்ற 2 ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, கொடூர மொக்கையாக இருக்கிறது என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சுவாரஸ்யத்தை கூட்ட போட்டியாளர்களை மோதவிட முடிவு செய்துவிட்டார் பிக் பாஸ்.

போட்டியாளர்கள் மோதிக் கொள்ளும் 2 ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது. முதல் ப்ரொமோ வீடியோவில் தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை போன்று காட்டியுள்ளனர்.
அவர்கள் மோதிக் கொள்வதை பார்த்து மும்தாஜ் பஞ்சாயத்து செய்கிறார். இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் சமைத்துப் போட்டு போட்டு சோர்வடைந்த மும்தாஜ் இனிமேல் என்னால் முடியாது என்கிறார்.
ஹவுஸ் கேப்டனான ஜனனிக்கும் நோஸ்கட் கொடுத்துள்ளார் மும்தாஜ். ப்ரொமோ நல்லா தான் இருக்கிறது. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நாளை பேசுவோம்.


Click it and Unblock the Notifications











