கமல் ஹாஸனை இப்படி மூக்குச்சளி பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்களே!

By Siva

சென்னை: இந்த வாரம் கமல் ஹாஸன் எப்பொழுது வருவார் என்று நம்மை விட போட்டியாளர்கள் தான் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. நிகழ்ச்சி பற்றி நெகட்டிவ் விமர்சனம் நிறைய எழுகிறது. கவிஞர் சினேகன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து பேசியது பார்வையாளர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

அவர் வந்த அன்று நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது.

வார இறுதி நாட்கள்

வார இறுதி நாட்கள்

வார இறுதி நாட்கள் எப்பொழுது வரும், கமல் ஹாஸன் வந்தால் தான் நிகழ்ச்சி கொஞ்சமாவது சுவராஸ்யமாக இருக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது உண்டு. ஆனால் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தால் பார்வையாளர்களை விட போட்டியாளர்கள் தான் கமல் வருகைக்காக காத்திருந்ததாக தெரிகிறது.

பொன்னம்பலம்

பொன்னம்பலம்

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் போலியாக இருக்கிறார்கள் என்று தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. இது குறித்து கமல் போட்டியாளர்களிடமே கேட்க இது இதை தான் எதிர்பார்த்தோம் என்பது போன்று ஆளாளுக்கு ஒருத்தரை குறை சொல்லத் துவங்கிவிட்டனர். தாடி பாலாஜி பொன்னம்பலம் மீது புகார்களாக அடுக்குகிறார். ரம்யா பட்டும் படாமலும் புகார் கூறினார்.

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

வகுப்பறையில் மிஸ் வெளியே சென்று விட்டு மீண்டும் வந்தால் மிஸ் அவன் என்னை அடிச்சுட்டான், இவன் என்னை கிள்ளிட்டான் என்று பள்ளிக் குழந்தைகளை புகார் கூறுவது போன்று இருந்தது போட்டியாளர்கள் நேற்று கமலிடம் புகார்களாக அடுக்கியது. கமலும் வேறு வழியில்லாமல் அவர்கள் கூறியதை எல்லாம் சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

புதிய போட்டியாளர்

புதிய போட்டியாளர்

போட்டியாளர்கள் கூறிய புகார்களை எல்லாம் பொறுமையாக கேட்ட கமல் ஹாஸன் ஒயில்டு கார்டு என்ட்ரி பற்றி பார்வையாளர்கள் தன்னிடம் கேட்டதை கூறினார். ஒயில்டு கார்டு என்று கூறியதும் போட்டியாளர்கள் முகத்தில் ஈயாடவில்லை. பின்னர் சமாளித்துக் கொண்டு அப்படி என்றால் நிகழ்ச்சி போர் அடிக்கிறது என்கிறார்கள் என்பது எங்களுக்கு புரிகிறது என்றனர்.

அழுகை

அழுகை

என்னடா நை நைய்யுன்னு கெடக்கிறார்களே என்று நினைத்தபோது பொன்னம்பலம் தான் பள்ளியில் சேர்ந்த விதத்தை கூறி கண் கலங்கி அனைவரையும் எமோஷனலாக்கிவிட்டார். தந்தை இல்லாததால் தானாக சென்று பள்ளியில் சேர்ந்ததாக கமலிடம் கூறினார் பொன்னம்பலம். சொல்லிக் கொண்டிருந்தபோதே அழத் துவங்கிவிட்டார். அவரை பார்த்து பார்வையாளர்கள் சிலரும் கண் கலங்கினார்கள்.

உண்மை

உண்மை

இந்த வீட்டில் உள்ள அனைவருமே நடிக்கிறார்கள் சார். யாரும் நடிக்காமல் உண்மையாக இருந்தால் இங்கு ரத்த ஆறு தான் சார் ஓடும். இது தான் உண்மை என்று சென்றாயன் கூறியதை கேட்டு பார்வையாளர்கள் விசில் அடித்து கைதட்டினார்கள். எல்லோர் மீது கோபம் வருகிறது. வேண்டும் என்றே வெறுப்பேற்றுகிறார்கள் என்றார் சென்றாயன். அவர் பேசியதை கேட்டு மும்தாஜ் நான்சென்ஸ் என்றார். அரசியல் பேசும் கமலை மூக்குச்சளி பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்கள். நீச்சல் குளத்தில் இருந்தபோது சென்றாயன் மூக்கில் இருந்து சளி வந்ததை பார்த்து வைஷ்ணவி உள்ளிட்ட போட்டியாளர்கள் முகம் சுளித்து வெளியேறியது குறித்து தான் கமல் பஞ்சாயத்து செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X