இந்த நேரம் பார்த்து பிக் பாஸ் வீட்டில் மாட்டிக்கிட்டோமே: போட்டியாளர்கள் வருத்தம்

By Siva

சென்னை: இந்த நேரம் பார்த்து வெளியே இல்லாமல் போய்விட்டோமே என்று பிக் பாஸ் போட்டியாளர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் 2 வீட்டில் நேற்றைய டாஸ்கில் ஆளாளுக்கு பேசிப் பேசி சாகடித்தனர். அப்போது திமுக தலைவர் கருணாநிதி இறந்த செய்தி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

அழுகை

அழுகை

மவுன அஞ்சலி செலுத்தியபோதே மகத்திற்கு அழுகை வந்துவிட்டது. என் நண்பர் அவர் தாத்தா கருணாநிதியை நினைத்து அழுவாரே, இந்நேரம் எனக்கு அங்கு இருக்க வேண்டும் போல் உள்ளதே. கருணாநிதி ஒரு லெஜன்ட், நாட்டின் மூத்த அரசியல் தலைவர், அவரை போன்று யாருமே இல்லை என்று கூறி ஃபீல் பண்ணினார் மகத். கருணாநிதிக்காக கலங்கியபோது தான் மகத்தை பார்த்த மக்களுக்கு அவர் மீது ஒரு பரிவு ஏற்பட்டது.

வருத்தம்

வருத்தம்

இந்நேரம் பார்த்து வெளியே இல்லாமல் போய்விட்டோமே என்று தோன்றுகிறது என்று ஜனனி தெரிவித்தார். கவலைப்பட்ட மகத்தை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார் வைஷ்ணவி. வெளியே ரணகளமாக இருக்குமே, வேற மாதிரி இருக்குமே என்று கூறினார் பாலாஜி. பார்த்தீங்களா போன வருஷம் அம்மா இறந்தாங்க, இந்த வருஷம் கலைஞர் என்றார் ஜனனி.

மருத்துவமனை

மருத்துவமனை

கருணாநிதிக்கு உடம்புக்கு முடியாமல் மருத்துவமனையில் அனுமதித்து இறந்திருக்கலாம் என்றார் பாலாஜி. போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது கருணாநிதி நலமாக இருந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த விஷயம் அவர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி முடியாமல் தான் இருந்தார், அவருக்கு 98 வயது என்ற மகத்தை இல்லடா 94, 95 என்று ஆளாளுக்கு ஒரு வயதை கூறி இறுதியில் 94 வயது என்று ஒரு முடிவுக்கு வந்தனர்.

தமிழன்

தமிழன்

தாத்தா என்று நாம் உரிமையோடு கூப்பிடக்கூடிய பச்சைத் தமிழன் நம் கலைஞர் ஐயாவாக தான் இருக்க முடியும். அவர் இறந்துவிட்டார் என்று கேட்டு எனக்கு உடல் நடுங்குகிறது. தமிழக மக்களே என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாக வந்து கை கொடுப்பேன் என்று அவர் உணர்வுப்பூர்வமாக கூறினார். அவருடைய பலமே பேனாவும், மையும் தான் என்றார் டேனி.

தயாநிதி அழகிரி

தயாநிதி அழகிரி

நான் கருணாநிதி அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். தயாநிதி அழகிரி என் உயிர் நண்பன். துரை உண்மையாக அங்கே இருக்க முடியவில்லை என்று கஷ்டமாக இருக்கிறது. நீ தைரியமாக இரு. தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்த ஆள் அவர். மூத்த அரசியல் தலைவர் அவர் தான். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று கூறி கலங்கினார் மகத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X