பெரிதாக சதி திட்டம் தீட்டும் ஐஸ்வர்யா, மும்தாஜிடம் பழிக்குமா?
சென்னை: ஹவுஸ் கேப்டன் ஆகியுள்ள ஐஸ்வர்யா பெரிதாக திட்டம் போட்டுள்ளார் என்கிறார் வைஷ்ணவி.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை சண்டையை வைத்தே ஓட்டலாம் என்று நினைக்கிறார்கள் போன்று. டாஸ்க் செய்தாலும் சண்டை போடுகிறார்கள், வீட்டு வேலை செய்யும் போதும் மோதிக் கொள்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக சென்றாயனுக்கும், மும்தாஜுக்கும் ஆகவே ஆக மாட்டேன் என்கிறது.

சண்டை
என்னால் காலை உணவை சமைக்க முடியாது என்று கூறிய மும்தாஜிடம் நீங்கள் தான் செய்யணும் என்று கறாராக கூறுகிறார் கேப்டன் ஐஸ்வர்யா. நீ சொல்லி நான் என்ன கேட்க என்பது போன்று முடியாது என்று முகத்தில் அடித்தது போன்று கூறிவிட்டார் மும்தாஜ். மும்தாஜிடம் மோத முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா
மும்தாஜை சமைக்கும் அணியிலேயே வரவிடக் கூடாது என்று ஐஸ்வர்யா என்னிடம் கூறினார். அவங்க டீயை அவங்க போடக் கூடாது என்று நான் ரூல் வைப்பேன் என்றார். ஆனால் தற்போது மும்தாஜை சமையல் அணியில் போட்டுள்ளார் ஐஸ்வர்யா. இது பழிவாங்கவா, விபரீதம் ஆகுமா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு ஐடியாவுடன் தான் ஆட்களை அணிகளாக பிரிக்கிறார் ஐஸ்வர்யா என்கிறார் வைஷ்ணவி.

ஒரே சத்தம்
பாத்திரம் கழுவ காலையிலேயே சண்டை போடுகிறார்கள். மும்தாஜ் ஜனனியை அழைத்து ஒரு டப்பாவை கழுவச் சொல்ல ஐஸ்வர்யாவோ நீ கழுவாதே என்கிறார். சமையல் செய்யும் அணி தான் அதையும் கழுவ வேண்டும் என்கிறார்கள். இதை கேட்ட பாலாஜி கடுப்பாகி கத்த ஆரம்பித்துவிட்டார். உடனே ஆளாளுக்கு பேச இவங்க எப்படா வாயை மூடுவாங்க என்று உள்ளது பார்வையாளர்களுக்கு.

அமைதி
வீட்டிற்குள் போட்டியாளர்கள் மல்லுக்கட்ட மகத் நீச்சல் குளம் அருகே தனியாக அமர்ந்திருந்ததை காட்டியபோது ஆஹா என்ன அமைதி என்று நிம்மதியாக இருந்தது. சண்டை போட்டால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியும் என்று யாரோ ஒரு அறிவுஜீவி ஐடியா கொடுத்திருக்கிறார் போன்று. இந்த சீசன் துவங்கியதில் இருந்தே ஒரே சண்டையாக உள்ளது.

ஒரு மணிநேரம்
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் 24 மணிநேரமும் சண்டை போட்டுக் கொள்வதாக வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு மணிநேரம் காட்டுவதையே பார்க்க முடியவில்லை இதில் 24 மணிநேரம் காட்டினால் என்னாவது. நிகழ்ச்சி துவங்கியதும் போட்டியாளர்கள் கூ கூன்னு கத்தி சண்டை போடுவதை பார்க்கும் பார்வையாளர்கள் கடுப்பாகி டிவியை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுகிறார்கள் இல்லை சேனலை மாற்றிவிடுகிறார்கள் என்பதை பிக் பாஸ் எப்பொழுது தான் புரிந்து கொள்ளப் போகிறாரோ?


Click it and Unblock the Notifications











