வரும் 24ம் தேதி முதல் 9 மணிக்கு ‘அரண்மனைக் கிளி’.. அப்போ பிக் பாஸ்?
விஜய் டிவியில் புதிய சீரியல் அரண்மனைக் கிளி ஒளிபரப்பாக இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இம்மாத இறுதியில் நிறைவடைய இருக்கிறது.
விஜய் டிவியில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜுன் மாதம் பிக் பாஸ் சீசன் 2 தொடங்கியது. முதல் சீசன் அளவிற்கு இது அதிக விறுவிறுப்பாக இல்லை என்பதே ஆரம்பம் முதல் பரவலான விமர்சனமாக உள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இம்மாத இறுதியோடு சீசன் 2 முடிவடைய இருக்கிறது.

புதிய சீரியல்:
தற்போது தினமும் இரவு 9 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 9 மணி முதல் 10.30 மணி வரை தினமும் ஒன்றரை மணி நேரம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், விஜய் டிவியில் விரைவில் இரண்டு புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

சீரியல் ப்ரோமோ:
இதில் அரண்மனைக் கிளி சீரியல் வரும் 24ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால், இந்த விளம்பரத்தைப் பார்த்த மக்கள் குழப்பமடைந்தனர்.

குழப்பம்:
அப்படியெனில் வரும் 23ம் தேதியோடு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறதா என்பதே அவர்களது சந்தேகம். அப்படிப் பார்த்தால் நிகழ்ச்சி 98 நாட்களோடு நிறைவடைவதாக கணக்குத் தெரிகிறது. 100 நாட்கள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பது தான் போட்டியின் விதி. அப்படி இருக்கையில் எப்படி இது சாத்தியம் என்பதே மக்களின் குழப்பம்.

நேரம் மாற்றம்:
ஆனால் நிஜம் அது இல்லையாம். 24ம் தேதி முதல் பிக் பாஸ் ஒளிபரப்பு நேரம் மாற இருக்கிறதாம். வழக்கத்திற்கு மாறாக இம்முறை கூடுதலாக பிக் பாஸ் ஒளிபரப்பு நாட்கள் அதிகமாகலாம் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











