திரும்பவும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அசிங்கப்பட்ட காயத்ரி!
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்து மீண்டும் அசிங்கப்பட்டுள்ளார் காயத்ரி.
பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களில் ஒருவர் நடன இயக்குநர் காயத்ரி. அப்போது அவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தால் மக்களிடையே பெரும் வெறுப்பைச் சம்பாதித்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவரது பேச்சு விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 வீட்டிற்கு விருந்தினராக முதல் சீசன் போட்டியாளர்கள் சென்றுள்ளனர். அவர்களில் காயத்ரியும் ஒருவர்.

முதல் சீசன் போட்டியாளர்கள்:
கடந்த ஒருவாரமாக சினேகன், வையாபுரி, காயத்ரி, ஆரத்தி மற்றும் சுஜா என பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இடையில் இரண்டு தினம் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ்வும் வந்திருந்தார்.

கலை நிகழ்ச்சி:
நேற்று இரண்டு சீசன் போட்டியாளர்களும் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றது. இதில் முதல் சீசன் போட்டியாளர்களுக்கு நடன இயக்குநரும், கடந்த சீசன் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி நடன அசைவுகளைச் சொல்லிக் கொடுத்தார்.

சொடக்கு மேல..
இது ஒருபுறம் இருக்க தற்போதுள்ள சீசன் 2 போட்டியாளர்கள் தாங்களாகவே தங்களுக்குத் தெரிந்த ஸ்டெப்புகளை வைத்து தங்கள் நடனத்திற்கு தயாரானார்கள். சீனியர்களுக்கு, ‘சொடக்கு மேல சொடக்கு போடுது..' பாடலும், ஜூனியர்களுக்கு, ‘சோகாமா' பாடலும் அளிக்கப்பட்டது.

விமர்சனம்:
இறுதியில் இரு தரப்பினரும் நடனம் ஆடினார்கள். ஆனால் சீனியர்களை விட ஜூனியர்கள் நடனம் ரசிக்கும்படி இருந்தது. இதனை சமூகவலைதளத்தில் பலரும் விமர்சித்திருந்தனர். நடன இயக்குநர் சொல்லிக் கொடுத்த நடனம் அவ்வளவாக நல்லாயில்லை என்பதே அவர்களது கருத்து. இதனால் மீண்டும் சமூகவலைதளத்தில் அசிங்கப்பட்டுள்ளார் காயத்ரி.


Click it and Unblock the Notifications











