கிளிக்காக அட்ஜஸ்ட் செய்த பிக் பாஸ்: அறிவித்த கமல்
Recommended Video

சென்னை: கிளிக்காக பிக் பாஸ் அட்ஜஸ்ட் செய்துள்ளார்.
தலைப்பை பார்த்துவிட்டு நீங்கள் ஏதாவது நினைத்துக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. இத்தனை நாட்களாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று முதல் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
அதை நான் நாங்கள் சொல்ல வந்தோம். இது குறித்த ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.
அரண்மனை கிளி
அரண்மனை கிளி எனும் புதிய மெகா தொடர் இன்று முதல் இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அதனால் இன்றில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு பதில் 9.30 மணிக்கு துவங்கும் என்று அறிவித்து ப்ரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வைஷ்ணவி
முன்னாள் போட்டியாளர்களான ரம்யா, வைஷ்ணவி ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் முன்பு போட்டியாளர்கள் தங்களின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.
சந்திரமுகி
சந்திரமுகி போன்று நடித்துக் காட்டிய ரித்விகாவை பார்வையாளர்கள் கலாய்த்துள்ளனர். இப்ப தான் மண்டகசாயம் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளது என்று விமர்சித்துள்ளனர்.
நடிப்பு
வைஷ்ணவி அடிக்க கீழே விழுந்த ஐஸ்வர்யாவின் நடிப்பு பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











