மும்தாஜுன்னா பெரிய கொம்பா: வேலையை காட்டிய சினேகன், காயு, சுஜா
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்குள் வந்துள்ள விருந்தாளிகள் தங்களின் வேலையை காட்டத் துவங்கிவிட்டனர்.
பிக் பாஸ் முதல் சீசனை போன்று இரண்டாவது சீசன் சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனம் உள்ளது. இந்நிலையில் தான் முன்னாள் போட்டியாளரான சினேகன் ஒரு நாள் வந்துவிட்டு போனார்.
அதை பார்த்த பார்வையாளர்களோ இன்று தான் நிகழ்ச்சி பார்க்கும்படி இருந்தது என்றார்கள். இதை பிக் பாஸ் நோட் செய்துவிட்டார்.

காயத்ரி
முதல் சீசனில் பிரச்சனைகளுக்கு பெயர் போன சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா வருணி, வையாபுரி ஆகியோரை பிக் பாஸ் 2 வீட்டில் தங்க வைத்துள்ளனர். அவர்கள் அங்கு ஒரு வாரம் இருந்து அதகளம் செய்யப் போகிறார்கள். இந்த ஒரு வாரத்தில் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கிவிடுவார்களாம். கட்டிப்பிடி வைத்தியம் சீசன் 2 ஆரம்பமா?
சுஜா
மும்தாஜ் எதற்கெடுத்தாலும் எனக்கு அந்த உணவு ஒத்துக்காது, இது ஒத்துக்காது என்பார். இந்நிலையில் தான் முன்னாள் போட்டியாளர்கள் கேங் அது என்ன உங்களுக்கு மட்டும் ஒய்யாரம் என்று உணவுத் துறையில் கை வைத்துள்ளனர். இதை பார்த்த மும்தாஜ் கடுப்பாகி பிக் பாஸே அவர்களை திருப்பி அனுப்பிடுவாங்க, எனக்கு உடம்புக்கு முடியாமல் போனால் அவர்களுக்கு தானே தலைவலி என்று கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தாடி பாலாஜி
விருந்தினர்கள் வந்த வேகத்தில் மும்தாஜ் மாறிவிட்டதை பார்த்த தாடி பாலாஜி கோபப்பட்டு கத்துகிறார். இவ்வளவு வயசாகியும் இவ்வளவு ஆட்டிடியூட் இருக்கும்போது சின்னப் பொண்ணுங்களுக்கு இருக்காதா என்று பாலாஜி கேட்கும் மற்றொரு ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்
விருந்தினர்களை மும்தாஜுடன் மோதவிட்டு அவரை வில்லி போன்று காட்டி ஐஸ்வர்யாவை நல்லவராக காட்ட முயற்சி செய்கிறாரா பிக் பாஸ்? ப்ரொமோ வீடியோக்களிலும் ஐஸ்வர்யா பேய் கத்து கத்தாமல் அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யாவுக்கு டைட்டிலை கொடுக்க புது திட்டமாக இருக்குமோ?


Click it and Unblock the Notifications











