பிக் பாஸ், எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
Recommended Video

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எங்களின் பொறுமையை சோதிக்காதீர்கள் என்று கடுப்புடன் கூறி வருகிறார்கள்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி முதல் சீசன் போன்று இல்லை. நிகழ்ச்சி துவங்கிய புதிதில் யார் அடுத்த ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரி என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் பார்த்தார்கள்.
தற்போது யாரும், யாருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை.

கொடுமை
பிக் பாஸும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குகிறேன் என்ற பெயரில் கொடுக்கும் புதிய டாஸ்க்குகள் பார்வையாளர்களை மேலும் கடுப்பாக செய்கிறது. கமல் வரும் நாட்கள் மட்டுமே ஆறுதலாக உள்ளது.

பணிப்பெண்
எஜமான், பணிப்பெண்கள் டாஸ்க் கொடுமையிலும் கொடுமை. எஜமானர்கள் என்ற பெயரில் ஷாரிக், மகத் செய்யும் லீலைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவரு பிக் பாஸா இல்லை வேறு பாஸா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள்.

ஆண்கள்
எஜமான் டாஸ்கில் பெண்களை நடனமாட விட்டு ஆண் போட்டியாளர்கள் சவுகரியமாக அமர்ந்து பார்த்தது கொடுமையின் உச்சக்கட்டம். எதற்கும் ஒரு லிமிட் உள்ளது பிக் பாஸ்.

கோபம்
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டையை எல்லாம் பார்த்தால் நேராக செட்டுக்கு போய் நாலு சாத்து சாத்த வேண்டும் போன்று இருக்கிறது என்று கொந்தளிக்கும் பார்வையாளர்களே அதிகம்.

டிவி
பிக் பாஸ் நிகழ்ச்சி பொறுமையை சோதிப்பதாக பலரும் குறை கூறியுள்ளனர். நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்காமல் கடுப்பாகி பாதியிலேயே டிவியை சுவிட்ச் ஆப் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஹாட்ஸ்டாரில் பார்ப்பவர்களோ முழுதாக பார்க்காமல் ஓட்டிவிட்டு ஓட்டிவிட்டு பார்க்கிறார்கள். மாத்தி யோசிங்க பிக் பாஸ், பார்வையாளர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.


Click it and Unblock the Notifications











