ஜனனி ஆசைப்படி பைனலில் ‘தமிழ்ப்பொண்ணு’.. அப்போ பட்டம் ‘அந்த’ப் பொண்ணுக்கா?
டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு தேர்வாகியுள்ளார் ஜனனி.
Recommended Video

சென்னை: சுத்தி சுத்தி வந்தீக டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் ஜனனி.
பிக் பாஸ் சீசன் 2 முடிய இன்னும் சில வாரங்கள் தான் உள்ளது. இந்நிலையில் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு செல்வதற்கான டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் அனைத்துப் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
கையில் சிறிய கிண்ணத்தில் கலர் கலரான தண்ணீரை ஏந்திக் கொண்டு பிக் பாஸ் அமைத்துக் கொடுத்த மேடையில் அவர்கள் வட்டமாக நடந்து வந்தனர்.

தண்ணீர் டாஸ்க்:
ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் யாருடைய கிண்ணத்தில் தண்ணீர் குறைவாக இருக்கிறது என்பதை முதல் சீசன் போட்டியாளர்கள் சோதனை செய்தனர். அதன்படி ஒவ்வொரு போட்டியாளராக இந்த டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

குழப்பம்:
கடைசியாக ஜனனியும், யாஷிகாவும் மட்டும் களத்தில் இருந்தனர். சுற்றி வரும் வட்ட மேடையில் அளவும் குறைக்கப்பட்டது. நீண்ட நேரமாக அவர்கள் சுற்றி வந்தும், இருவரது பாத்திரத்தில் இருந்த நீரும் சம அளவே இருந்ததால் நடுவர்கள் குழப்பமடைந்தனர்.

களைப்பு:
இதனால், ஒரு கையால் மட்டும் பாத்திரத்தை ஏந்தியபடி நடக்க வேண்டும் என விதிமுறையை மேலும் கஷ்டமாக்கினார் பிக் பாஸ். ஏற்கனவே நீண்ட நேரமாக சுற்றி வந்ததில் களைத்துப் போயிருந்த போட்டியாளர்கள், ஒரு கையில் பாத்திரத்தை ஏந்தி நடக்க கஷ்டப்பட்டனர்.

திடீர் திருப்பம்:
ஜனனியின் பாத்திரத்தில் இருந்த நீர் அதிகமாக கீழே கொட்டியது. இதனால் அவர் தான் போட்டியில் இருந்து வெளியேறுவார் என சக போட்டியாளர்கள் நினைத்தனர். ஆனால், திடீர் திருப்பமாக யாஷிகாவின் கையில் இருந்த கண்ணாடிப் பாத்திரம் கை நழுவி கீழே விழுந்து உடைந்தது.

ஜனனி வெற்றி:
இதனால் ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு செல்லும் தகுதியைப் பெற்றார். இதன் மூலம் ரித்விகா, ஜனனியின் ஆசைப்படி பைனலுக்கு ஒரு தமிழ்ப் பெண் செல்வது உறுதியாகியுள்ளது. ரித்விகாவும், விஜயலட்சுமியும் இந்த வார நாமினேசனில் உள்ளனர். அவர்கள் இருவரில் ஒருவரும் பைனலுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சந்தேகம்:
ஆரம்பத்தில் இந்தப் போட்டியில் ஐஸ்வர்யா தான் ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பாதியிலேயே தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறினார். தற்போது நடப்பவைகளை வைத்துப் பார்க்கும் போது இறுதிச் சுற்றில் சம்பிரதாயத்திற்கு ஜனனியை வைத்து விட்டு, பட்டத்தை ஐஸ்வர்யாவிற்கு வழங்கி விடுவார்களோ என்ற சந்தேகம் தான் வருகிறது.


Click it and Unblock the Notifications











