வாவ்.. போட்டியாளர்களை மிரள வைத்த கமல்.. ‘தலைவன் இருக்கின்றான்’!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று விறுவிறுப்பாகச் சென்றது.

By Jaya Chitra

சென்னை: பிக் பாஸ் மேடையில் கமல் தவறு செய்த போட்டியாளர்களை சாட்டையடி வார்த்தைகளால் வறுத்தெடுத்தது ரசிக்கும்படி இருந்தது.

நிகழ்ச்சி தொடங்கி பல வாரங்களுக்குப் பிறகு, இந்த வாரம் தான் பிக் பாஸ் வீட்டில் அனல் பறக்கும் பல சம்பவங்கள் நடைபெற்றன. வைஷ்ணவி தனிமை அறையில் அடைக்கப்பட்டார். வீட்டின் தலைவியான ஐஸ்வர்யா, ராணி மகாராணி டாஸ்க் மூலம் சர்வாதிகாரி ஆனார்.

சர்வாதிகாரி ஆனதும் முதல் வேலையாக தன்னைப் பற்றி தவறாக பேசிய பாலாஜி மீது குப்பைகளை அள்ளிக் கொட்டினார். செண்ட்ராயனோடு வாக்குவாதம் ஏற்பட்டது. இப்படியாக கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பல பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

குறைவான கண்டிப்பு:

குறைவான கண்டிப்பு:

சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே கமலில் பங்களிப்பு அவ்வளவாக இல்லை என்ற முணுமுணுப்பு மக்களிடையே பரவலாக இருந்தது. தவறு செய்யும் போட்டியாளர்களை அவர் சரிவர கண்டிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது.

கமலின் விளக்கம்:

கமலின் விளக்கம்:

கட்சி ஆரம்பித்து விட்டதாலும், தனது விஸ்வரூபம் 2 ரிலீஸ் வேலைகளிலுமே அவர் முழு கவனமுடன் இருப்பதாகத் தெரிந்தது. பிக் பாஸ் மேடையையுமே அவர் அதற்காகத் தான் பயன்படுத்திக் கொள்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்தது. அதனை கமலுமே ஆம் என உறுதி செய்திருந்தார்.

விமர்சனம்:

விமர்சனம்:

ஏற்கனவே விறுவிறுப்பின்றி இருந்த நிகழ்ச்சியில், வார இறுதியில் கமல் ஆவது குறும்படம் போட்டுக் காட்டுவார் என எதிர்பார்த்தனர். ஆனாலும் அவரும் தொடர்ந்து ஏமாற்றி வந்தார். இதனால் நிகழ்ச்சி மீது மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு வந்தது. சமூகவலைதளங்களிலும் இது குறித்து மக்கள் விமர்சித்து வந்தனர்.

மிரள வைத்த கமல்:

மிரள வைத்த கமல்:

இவையெல்லாம் கமல் காதுக்கும் எட்டி விட்டதோ என்னவோ தெரியவில்லை. நேற்று நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என எல்லாரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். ஒரு கட்டத்தில் தனது கோட்-ஐ கழற்றி வீசி போட்டியாளர்கள் மட்டுமின்றி மக்களையும் மிரள வைத்தார்.

கண்டிப்பு:

கண்டிப்பு:

எது கெட்ட வார்த்தை என்பதற்கு அவர் அளித்த விளக்கம் அழகாக இருந்தது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், தவறு செய்த போட்டியாளர்களை பாராபட்சம் இன்றி அவர் கண்டித்தது பாராட்டும் விதத்தில் இருந்தது. கடந்த சீசன் போட்டியாளர்களுக்கு இருந்த பயம், இம்முறை போட்டியாளர்களுக்கு இல்லை என்றே கூறலாம். காரணம் அந்தளவிற்கு போட்டியாளர்களுடன் அவர் மென்மையாக இதுவரை நடந்து வந்தார்.

தலைவன் இருக்கின்றான்:

தலைவன் இருக்கின்றான்:

ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கமலின் கண்டிப்பான முகத்தைப் போட்டியாளர்கள் பார்த்தனர். ஒவ்வொரு சம்பவமாக தனித்தனியாகப் பேசி தவறு செய்தவர்களின் தலையில் நச்சென கொட்டினார் கமல். இதனைப் பார்த்த பார்வையாளர்களுக்கு, ‘வாவ் இவர்களைக் கண்டிக்க தலைவன் இருக்கிறான்' என்றே தோன்றியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X