கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் ‘பிக் பாஸ்’ கணக்குப் புரியலையே..!

பிக் பாஸ் சீசன் 2 முடிய இன்னும் ஐந்து வாரங்கள் இருப்பதாக கமல் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Jaya Chitra

சென்னை: பிக் பாஸ் சீசன் 2 முடிய இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில், கமல் இன்னும் ஐந்து வாரங்கள் இருப்பதாகக் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் ஒளிபரப்பாகத் தொடங்கியது. கிட்டத்தட்ட 77 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இன்னும் 23 நாட்கள் தான் மீதமிருக்கின்றன.

தற்போது பிக் பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் இன்று அவ்வீட்டில் இருந்து வெளியேற இருக்கிறார்.

விஜயலட்சுமி:

விஜயலட்சுமி:

இந்தப் போட்டியாளர்களில் விஜயலட்சுமி கடந்த வாரம் வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தவர். கடந்த முறை ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் எல்லாம் வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார்கள். ஆனால் இம்முறை இதுவரை ஒருவர் மட்டுமே வைல்ட் கார்ட் மூலம் வந்துள்ளார்.

5 வாரங்களா?

5 வாரங்களா?

ஆனால், இன்னும் போட்டி முடிய 23 நாட்களே, அதாவது மூன்று வாரங்களே உள்ள நிலையில் புதிதாக போட்டியாளர்கள் யாரும் வீட்டிற்குள் வருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே குறைந்து விட்டது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இன்னும் பிக் பாஸ் ஐந்து வாரங்கள் இருப்பதாக கமல் குறிப்பிட்டார். இதனை போட்டியாளர்களும் ஒப்புக் கொண்டனர்.

112 நாட்கள் வருகிறதே?

112 நாட்கள் வருகிறதே?

இன்னும் ஐந்து வாரங்கள் என்றால், 35 நாட்கள். அப்படிப்பார்த்தால் ஏற்கனவே 77 நாட்கள் கடந்து விட்ட நிலையில் இந்த 35ஐயும் சேர்த்தால், 112 நாட்கள் அல்லவா வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்டே 100 நாட்கள் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து இருக்க வேண்டும் என்பது தானே.

திரும்பத் திரும்ப..

திரும்பத் திரும்ப..

ஆனால், நேற்று ஏன் கமலும், போட்டியாளர்களும் திரும்பத் திரும்ப ஐந்து வாரங்கள் எனக் குறிப்பிட்டனர் எனத் தெரியவில்லை. இதன் மூலம் பார்வையாளர்கள் மனதில் இன்னும் ஐந்து வாரங்கள் மீதமிருக்கின்றன என்ற கருத்தை அவர்கள் பதிய வைக்க முயற்சித்தார்களா எனத் தெரியவில்லை.

வைல்ட் கார்ட் எண்ட்ரி?

வைல்ட் கார்ட் எண்ட்ரி?

இன்னும் ஐந்து வாரங்கள் என பிக் பாஸ் கூறியதன் மூலம் புதிய போட்டியாளர்கள் வரும் வாரங்களில் நிகழ்ச்சிக்கு வரலாம் எனத் தெரிகிறது. ஆனால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் எனக் கூறிவிட்டு, போன சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி, 16 போட்டியாளர்கள் தான் களமிறக்கப்பட்டனர்.

புரியலையே பிக் பாஸ்?

புரியலையே பிக் பாஸ்?

அந்தவகையில் தனக்கு ஏற்ற வகையில் நிகழ்ச்சியின் விதிமுறைகளை பிக் பாஸ் மாற்றி அமைத்துக் கொள்கிறார் என்று தான் தோன்றுகிறது. அண்ணாமலை ராதாரவி கணக்கில் சொல்வதென்றால், ‘கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் உங்க கணக்குப் புரியவே மாட்டேங்குதே பிக் பாஸ்'.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X