போகிற போக்கில் பத்த வைத்து விட்டுச் சென்ற மோமோ!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் மும்தாஜ்.

By Jaya Chitra

Recommended Video

கமல் மீது க்ரஷ்..நீண்ட குறும்படம்..கெத்தாக வெளியேறிய மும்தாஜ்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது, ஐஸ்வர்யாவிற்கும், ரித்விகாவிற்கும் சண்டை ஏற்படும் வகையில் தமிழ்ப் பொண்ணு பிரச்சினையை கிளப்பி விட்டுச் சென்றார் மும்தாஜ்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து 11வது போட்டியாளராக வெளியேறியுள்ளார் நடிகை மும்தாஜ். பிக் பாஸ் இறுதிச்சுற்று வரைச் சென்று, பட்டம் வாங்குவதற்கு அதிக தகுதியுடைய போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் மும்தாஜ்.

ஆனால், ஆரம்பம் முதலே தன்னுடைய கம்போர்ட் ஷோனில் இருந்து வெளியே வராதவர் என்ற குற்றச்சாட்டே, தற்போது அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற காரணமாகியுள்ளது.

வெளியேற்றம்:

வெளியேற்றம்:

தன் உடல்நிலையை காரணம் காட்சி பல டாஸ்க்குகளில் சரி வர பங்கேற்காதவர் மும்தாஜ். ஆனால் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களிடமும் அன்பைக் காட்டி தப்பித்து வந்தவர், இந்த வாரம் மாட்டிக் கொண்டார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதிருப்தி:

அதிருப்தி:

போன் பூத் டாஸ்க்கில் மும்தாஜைத் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களுமே தங்களது சக போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் அளித்த டாஸ்க்கை வெற்றிகரமாக நிறைவேற்றினர். ஆனால், ரித்விகாவுக்காக அளிக்கப்பட்ட டாஸ்க்கை செய்ய மறுத்து மக்களிடம் அதிருப்தியைச் சம்பாதித்தார் மோமோ.

அட்வைஸ்:

அட்வைஸ்:

இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேறும் போது, ரித்விகாவிடம் ‘தமிழ்ப் பொண்ணு, வடநாட்டுப் பொண்ணுனு வேறுபாடு காட்டாதீங்க' என கேட்டுக் கொண்டார். அதற்கு ரித்விகாவும் சளைக்காமல் தான் அப்படியெல்லாம் பேசுவதில்லை எனப் பதிலளித்தார்.

பகை:

பகை:

ஏற்கனவே டாஸ்க் செய்யாமல் ரித்விகாவை நேரடியாக நாமினேசனுக்கு அனுப்பிய மும்தாஜ், வீட்டை விட்டுக் கிளம்பும் போது அவருக்கும், ஐஸ்வர்யா, யாஷிகாவுக்கும் பகையை உருவாக்கும் விதத்தில் பேசிச் சென்றுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே ஐஸ் மற்றும் யாஷிகா, மற்றவர்களுடன் அதிகம் சேராமல் தனித்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X