மும்தாஜ் சொன்னது சுத்தப் பொய்.. குறும்படம் போடாமலேயே நிரூபித்த பிக் பாஸ்!
உறவினர்களைச் சந்தித்ததால், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இல்லை என மும்தாஜ் கூறியது பொய் என கடந்தவாரம் நிரூபணம் ஆகிவிட்டது.
கடந்த 70க்கும் அதிகமான நாட்களாக போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். ஆனால், வெளியில் ஒரு குடும்பம் போல் தெரிந்தாலும், உண்மையில் அனைவரும் அப்படியில்லை என முன்பொரு வாரம் கமலிடம் முறையிட்டிருந்தார் மும்தாஜ்.
அதனை நிரூபணம் செய்வது போல் அங்கு சில சம்பவங்களும் நடைபெற்றன. உதாரணத்திற்கு மும்தாஜை மஹத் வம்பிழுத்த காட்சிகளைக் கூறலாம். அந்த இடத்தில் மும்தாஜ் இல்லாமல், உங்கள் சொந்த அக்கா இருந்திருந்தாலும் என கமல் கூட கேள்வி எழுப்பினார்.

இன்ப அதிர்ச்சி:
இந்நிலையில், அனைவருக்குள்ளும் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பாசத்தை இந்த வாரம் வெளியில் கொண்டு வந்து விட்டார் பிக் பாஸ். முதலில் ஒவ்வொரு போட்டியாளரின் வீட்டில் இருந்தும் கடிதம் மற்றும் பரிசுப் பொருட்கள் வந்தது. பின்னர், ஒவ்வொரு போட்டியாளரின் உறவினர்களாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள்.

ஆனந்தக் கண்ணீர்:
கடிதம் படிக்கப்படும் போது ஆகட்டும், மற்ற போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தபோதும் ஆகட்டும், ஒவ்வொரு போட்டியாளர்களும் உணர்ச்சிவசப் பட்டு அழுதார்கள். காரணம், ஏற்கனவே நடந்த உரையாடல்கள் மூலம் அவர்கள் அறிமுகமாகி இருந்ததால் தான்.

பெருமை:
உதாரணத்திற்கு செண்டுவின் மனைவியை பிக் பாஸ் வீடே கொண்டாடியது. அவருக்கு வளைகாப்பு எல்லாம் நடத்தி அசத்தினார்கள். ‘நான் தான் அப்பவே சொன்னேன்ல' என ஆளாளுக்கு பெருமை பட்டுக் கொண்டார்கள்.

நெகிழ்ச்சி:
சக போட்டியாளர்களின் உறவுகளையும் தங்கள் உறவுகளாகவே பாவித்து மரியாதை செலுத்தினார்கள். போட்டியாளர்களின் உறவினர்களும் அனைத்து போட்டியாளர்களிடமும் சமமாக நடந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. இதன் மூலம் நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக நினைக்கவில்லை என்ற மும்தாஜின் கருத்து பொய் என நிரூபணம் ஆகியுள்ளது.

லா லா மிஸ்ஸிங்:
இப்படியாக இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் ஒரே ஆனந்தக் கண்ணீரும், ஆரவாரமுமாகவேக் காணப்பட்டது. விக்ரமன் படம் போல, ‘லா லா' தான் பின்னணியில் கேட்கவில்லை. மற்றபடி காட்சிகள் அனைத்தும் உணர்ச்சிகளைப் பிழிந்து, பார்வையாளர்களையும் கண்ணை வேர்க்க வைக்கும் விதத்தில் தான் இருந்தது.


Click it and Unblock the Notifications











