மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஓவியா: 17வது ஆள் #BiggBoss2Tamil
Recommended Video

சென்னை:பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஓவியா செல்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு துவங்குகிறது. கடந்த சீசனை போன்றே இந்த சீசனும் பரபரப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோவை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ்
ஓவியா
மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியா செல்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அவர் பெட்டியும், கையுமாக செல்கிறார். 17வது ஆளாக வீட்டிற்குள் செல்கிறார்.
ரசிகர்கள்
கமல்
ஓவியா வருவதை பார்த்து அரங்கில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி கரகோஷம் செய்கின்றனர். இதை எல்லாம் விட்டுவிட்டு பாதியில் போய்விட்டீர்களே என்று கமல் ஓவியாவிடம் தெரிவிக்கும் வீடியோ ஓவியா ஆர்மிக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

போட்டியாளர்கள்
16 பேர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ரசிகர்களின் ஆவலை தூண்ட ஓவியாவை ஓரிரு நாட்கள் பிக் பாஸ் வீட்டில் வைத்திருக்கலாம். பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் அந்த நிகழ்ச்சிக்கு உதவ மாட்டாரா என்ன?

ப்ரொமோ
முடியாது
பிக் பாஸ் ப்ரொமோ வீடியோக்களில் காட்டுவது ஒன்றாகவும், வீட்டில் நடப்பது ஒன்றாகவும் இருந்ததை ரசிகர்கள் ஏற்கனவே பலமுறை பார்த்துவிட்டனர். அதனால் ஓவியா விஷயத்தில் அவர்கள் அவ்வளவு எளிதில் ஏமாறமாட்டார்கள்.



Click it and Unblock the Notifications











