மஹத் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போயிடும் போல இருக்கே..!

பிக் பாஸ் வீட்டின் விருந்தினராக மஹத் வந்திருந்தார்.

By Staff

Recommended Video

பழைய நினைப்பில் ஒரே பெட்டில் படுத்து புறம் பேசிய மகத், யாஷ், ஐஸ்!- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாக செண்ட்ராயனும், மஹத்தும் வந்திருந்தனர்.

பிக் பாஸ் சீசன் 2 முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் இரண்டு இரண்டு பேராக பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி, நேற்று மஹத்தும், செண்ட்ராயனும் வந்திருந்தனர். வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு அவர்கள் ஜாலி டாஸ்க்குகள் வழங்கினர்.

நடிப்பு டாஸ்க்:

நடிப்பு டாஸ்க்:

அப்போது ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா மஹத் போன்றும், விஜி மற்றும் ஜனனி செண்டுவைப் போல் நடிக்க வேண்டும் என்றும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதன்படி, இருதரப்பும் நடித்துக் காட்டியது.

மஹத்தாக மாறிய ரித்விகா:

மஹத்தாக மாறிய ரித்விகா:

அப்போது ஐஸ்வர்யா யாஷிகா போன்று நடித்தார். மஹத் போல் ரித்விகா, மிகவும் உணர்ச்சிகரமாக நடித்துக் காட்டினார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, ஒரு சமயம் யாஷிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது நடந்த சம்பவம் அது.

பிராச்சியின் கோபம்:

பிராச்சியின் கோபம்:

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது மஹத்தும், யாஷிகாவும் நெருங்கிப் பழகியது அனைவரும் அறிந்ததே. ஒருவரை ஒருவர் நேசிப்பதாக இருவரும் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டனர். இதனால் மஹத்திற்காக வெளியில் காத்திருந்த அவரது காதலி பிராச்சி கோபமடைந்தார்.

சமாதானம்:

சமாதானம்:

மஹத்தை தான் பிரிவதாக அவர் டிவிட்டர் வாயிலாக அறிவித்தார். ஆனால் மஹத் வெளியில் வந்ததும் நடந்ததே வேறு. தன் காதலியை அவர் சமாதானப் படுத்தி விட்டார். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் சமூகவலைதளங்களில் வெளியிட்டார்.

டென்சன்:

டென்சன்:

இந்நிலையில், யாஷிகாவிற்காக மஹத் பதறிய காட்சிகளை திரும்பவும் நடித்துக் காட்டியுள்ளனர் ஐஸ்வர்யாவும், ரித்விகாவும். இதைப் பார்த்தால் பிராச்சி மீண்டும் டென்சன் ஆக வாய்ப்புகள் அதிகம். கஷ்டப்பட்டு பிராச்சியை சமாதானப்படுத்தியதை எல்லாம் ஒரு நொடியில் வீணாக்கி விட்டார்கள் ரித்துவும், ஐஸுவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X