ரித்விகால பாதி ஐஸ்... ஐஸ்ல பாதி விஜி.. விஜிகிட்ட ஜனனி!
அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார் ரித்விகா.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களில் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் ரித்விகா.
பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளர் யார் என்பது இன்னும் இரு தினங்களில் தெரிந்து விடும். இறுதி வாரத்தில் இருக்கும் நான்கு போட்டியாளர்களுக்கும் மக்களிடம் இருந்து எத்தனை வாக்குகள் கிடைத்து வருகிறது என்பதை அவ்வப்போது விஜய் டிவியில் காட்டி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் ரித்விகா முதலிடத்தில் இருக்கிறார். அவர் ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் (செய்தி தயார் செய்த நேரப்படி) பெற்றுள்ளார்.

2ம் இடத்தில் ஐஸ்:
அவருக்கு அடுத்த இடத்தில் ஐஸ்வர்யா இருக்கிறார். ரித்விகா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் பாதி அவருக்கு கிடைத்துள்ளது. அதாவது அவர் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார்.

ஜனனியின் சரிவு:
மூன்றாம் இடத்தில் ஆரம்பத்தில் ஜனனி இருந்தார். பிக் பாஸ் வீட்டில் குறைந்த நாட்களே இருந்தாலும் தனது தெளிவான பேச்சு மற்றும் சாதுர்யமான நடவடிக்கைகளால் மக்களிடம் தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகிறார் விஜி. வழக்கமாக வெளியில் குழப்பவாதிகளாக இருந்து, பிக் பாஸ் வீட்டை போதிமரமாக மாற்றிவர்கள் தான் ஏராளம்.

தட்டிப் பறித்த விஜி:
ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு தெளிவானவராகவே வீட்டிற்குள் நுழைந்து, தொடர்ந்து தன் நிலையை விட்டுத் தராமல் விளையாடி வரும் விஜியை அனைவருக்கும் பிடித்துள்ளது. இதனால் அவர் ஜனனியை நான்காம் இடத்திற்கு தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் பெற்றுவரும் வாக்குகளின் எண்ணிக்கை ஐஸ்வர்யாவின் வாக்கு எண்ணிக்கையில் பாதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

டைட்டில் வின்னர்:
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் டைட்டில் வின்னராக ரித்விகாவும், ரன்னராக ஐஸ்வர்யாவும் வருவது உறுதி. நேரடியாக கிராண்ட் பினாலேக்கு கோல்டன் டிக்கெட் வாங்கிய ஜனனி நான்காம் இடத்திற்கு வருவார் எனத் தெரிகிறது. நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜிக்கு மூன்றாம் இடம் கிடைப்பதே மிகப்பெரிய வெற்றி தான்.


Click it and Unblock the Notifications











