twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரித்துவைக் கன்பியூஸ் ஆக்கிய பிக் பாஸ்!

    By Jaya Chitra
    |

    சென்னை: பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ரித்விகா.

    பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், விறுவிறுப்பு கூடி வருகிறது. போன் பூத் டாஸ்க்கில் ரித்துவைத் தவிர மற்ற அனைத்துப் போட்டியாளர்களும் அடுத்தவார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டு விட்டனர்.

    மும்தாஜ் முடிக்கு பச்சை நிறச் சாயம் அடித்துக் கொள்ள மறுத்ததால், ரித்விகா மட்டும் நேரடியாக அடுத்த வாரம் நாமினேட் செய்யத் தேர்வு செய்யப்பட்டார்.

    நம்பிக்கை:

    நம்பிக்கை:

    இதனால் அவர் மிகவும் சோகமாக காணப்பட்டார். ஆனால், ரித்விகாவிற்கு மக்களிடையே நல்ல ஆதரவு இருக்கிறது. எனவே நிச்சயம் அவரை மக்கள் காப்பாற்றி விடுவார் என பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் நம்புகின்றனர்.

    தலைவருக்கான போட்டி:

    தலைவருக்கான போட்டி:

    இது ஒருபுறம் இருக்க, இந்த வார பிக் பாஸ் வீட்டிற்கான தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், கேப்டன் என்ற மரக்கட்டையை, தொட்டி போன்று இருக்கும் ஒன்றில், சரிசமமாக வைக்க வேண்டும். பின்னர், ஒரு கையில், கயிற்றையும் பிடித்துக் கொள்ள வேண்டும்.

    ரித்து வெற்றி:

    ரித்து வெற்றி:

    இந்த டாஸ்க்கில் ரித்விகா வெற்றி பெற்றார். இதனால் வரும் வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாக அவர் இருப்பார். ரித்விகா தலைவியானதால், யாஷிகாவின் தலைவி பொறுப்பு முடிவடைந்தது.

    குழப்பம்:

    குழப்பம்:

    வழக்கமாக பிக் பாஸ் வீட்டுத் தலைவரை மற்றவர்கள் நாமினேட் செய்ய முடியாது. ஆனால், தற்போது தலைவியாகியுள்ள ரித்விகாவோ ஏற்கனவே நேரடியாக நாமினேட் ஆகி இருக்கிறார். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    வெயிட் அண்ட் ஸீ:

    வெயிட் அண்ட் ஸீ:

    ஒருவேளை தலைவி என்ற காரணத்தைச் சுட்டிக் காட்டி, ரித்துவை நாமினேசனில் இருந்து பிக் பாஸ் காப்பாற்றுவாரா? இல்லை, மக்களுடன் மோத விட்டு அவரது பலத்தை நிரூபிக்க வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English summary
    In Bigg boss 2 Tamil actress Riythvika is the captain of the house for this week.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X