ஐஸ் மீதிருந்த கோபத்தில்.. செண்டுவிடம் அந்த முக்கிய விசயத்தை கேட்க மறந்த கமல்!

செண்டுவின் வெளியேற்றத்தால் கமலும் சோகமாகியுள்ளார்.

Recommended Video

வெளியேற்றப்பட்ட சென்றாயன்...ஐஸ் மேல் கோபத்தில் இருந்த கமல்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் கமலுக்கு பிடித்த போட்டியாளர்களில் பொன்னம்பலத்தைப் போலவே செண்டுவும் ஒருவர். இதனால் தான் செண்டுவின் வெளியேற்றம் கமலையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சீசனில் கமலுக்குப் பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் பரணி. காரணம் அவரது வெகுளித்தனத்தை வைத்து பலர் விளையாடியது தான். அந்தவகையில் இந்த சீசனிலும் தோற்றத்தில் மற்றும் செயல்பாடுகளில் பரணியை ஞாபகப் படுத்தும் வகையில் இருந்தவர் செண்ட்ராயன்.

அதனாலேயே ஆரம்பம் முதலே கமலுக்குப் பிடித்தமான போட்டியாளராக செண்டு இருந்தார். இதுவரை கமலிடம் திட்டு வாங்கும் அளவிற்கு அவர் எதுவும் செய்யவில்லை. மாறாக பிக் பாஸ் மேடையில் கமல் சிரித்துப் பேச பல சமயங்களில் அவர் காரணமாக இருந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

bigg boss 2 tamil sendrayan eliminated

ஆங்கில ஆசை:

ஆங்கில ஆசை:

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் இருந்த செண்டு இல்லை தற்போது வெளியேறியவர். அப்போது அவரது முக்கிய நோக்கம் பிக் பாஸ் பட்டத்தை வெல்வதைவிட, ஆங்கிலம் கற்றுக் கொள்வதாகத் தான் இருந்தது.

கட்டாயம்:

கட்டாயம்:

காரணம் வீட்டில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் வாயைத் திறந்தாலே ஆங்கிலமாகத் தான் கொட்டியது. அவர்களுக்கு சளைத்தவர் இல்லை தான் என்பதைக் காட்ட விரும்பினார் செண்டு. இதற்காக பிக் பாஸ் வீட்டில் அவர் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசித் திரிந்தார்.

விஸ்வரூபம் படக்குழு:

விஸ்வரூபம் படக்குழு:

கமலும் பிக் பாஸ் மேடையில் இதனைக் குறிப்பிட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முன் அவர் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவராக மாற வேண்டும் என விரும்பினார். ஸ்ருதி வந்திருந்தபோது மட்டுமல்ல, விஸ்வரூபம் படக்குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்த போதும் இதனை பற்றி பேசினர்.

குறும்படம்:

குறும்படம்:

ஆனால், சமீபநாட்களாக செண்டு தனது ஆங்கில ஆசையை மறந்து விட்டார் என்றே கூற வேண்டும். கமலும் அதைப் பற்றி பேசவில்லை. மேடையில் குறும்படம் போட்டிக் காண்பித்தபோதும் கூட அவர் அதனை ஞாபகப் படுத்தி பேசவில்லை.

தத்தெடுக்கும் விருப்பம்:

தத்தெடுக்கும் விருப்பம்:

இதேபோல், பிக் பாஸ் மேடையில் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவதாக முன்பு செண்டு கூறியிருந்தார். இது குறித்தோ செண்டுவின் மனைவி கர்ப்பமாக இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்தோ கமல் மேடையில் செண்டுவிடம் எதுவும் பேசவில்லை.

ஐஸ் மீது கோபம்:

ஐஸ் மீது கோபம்:

காரணம் செண்டுவின் வெளியேற்றத்தால் மக்களைப் போலவே கமலும் சோகத்தில் இருந்தார். ஐஸ்வர்யாவிற்காக செண்டு பலிகடா ஆனதை அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதன் காரணமாகவே ஐஸ்வர்யா மீது தொடர்ந்து தனது கோபத்தை அவர் காட்டினார். அதனால் சிரித்துப் பேசி தனது கோபத்தை கலைக்க கமல் விரும்பவில்லை எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X