ஐஸுவுக்காக பரிதாபப்பட்ட செண்டு அம்மா.. உண்மை தெரிந்ததால் ஷாக்!
செண்ட்ராயனின் பெற்றோர் மற்றும் மனைவி பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சென்றனர்.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவைப் பார்த்து, ஆறுதலாகப் பேசினார் செண்ட்ராயனின் அம்மா.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தன் மகனைப் பார்க்க சென்றிருந்தனர் செண்டுவின் அப்பா, அம்மா. கூடவே செண்டுவின் மனைவியும் வந்திருந்தார். மனைவி கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார் செண்டு.

பின்னர் பிக் பாஸ் வீட்டில் வைத்தே செண்டுவின் மனைவிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் அவர்கள் அங்கே இருந்தனர். பின்னர் பிக் பாஸ் அறிவிப்பைத் தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியேற முற்பட்டனர்.
அப்போது, ஐஸ்வர்யாவைப் பார்த்ததும் செண்டுவின் அம்மாவிற்கு திடீரென பரிதாபம் ஏற்பட்டது. 'பாவம் உனக்கு அம்மா இல்லனு சொன்னல்ல. கவலைப்படாதம்மா. இனி நான் இருக்கேன்’ என முந்தைய நாள் நடந்தது தெரியாமல் அன்பாக அவரிடம் பேசினார்.
உடனடியாக அம்மாவின் பேச்சை இடைமறித்த செண்டு, 'இல்ல இல்ல அவங்களுக்கு அம்மா இருக்காங்க. நேத்து தான் வந்துட்டுப் போனாங்க’ எனத் திருத்தினார். பின்னர், 'ஓ அப்படியா’ என அங்கிருந்து வெளியே சென்றார் அந்த அம்மா.
ஆனால், இதில் தவறு அவர் மீதில்லை என்று தான் கூறவேண்டும். முன்பு ஒரு எபிசோட்டில் தனது தாய் இறந்து விட்டதாக ஐஸ்வர்யாவே தான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











