சிம்புவின் ஹீரோயின் ஐஸ்... செண்டு வாய் கூசாமல் பொய் சொன்னதும் ஒரு ‘ஸ்ட்ராடஜி’ தான்!

சிம்புவின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா நடிப்பதாக சென்ட்ராயன் சொன்னது பொய் எனத் தெரிகிறது.

சென்னை: சிம்பு ரசிகர்களின் வாக்குகளை ஐஸ்வர்யாவிற்கு கிடைக்கச் செய்யவே, சிம்பு படத்தில் ஐஸ் நாயகியாக நடிப்பதாக புதிய ஸ்ட்ராடஜியை பிக் பாஸ் பயன்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் செண்ட்ராயன். இவர் நேற்று முன் தினம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்திருந்தார்.

அப்போது ஐஸ்வர்யாவை மகிழ்ச்சி அடையச் செய்யும் நோக்கில், 'உனக்கு வெளியில் நல்ல பெயர் இருக்கிறது' எனத் திரும்பத் திரும்பச் சொன்னார். இது ஐஸ்வர்யாவிற்கு மட்டுமல்ல. பார்வையாளர் மனதிலும் 'ஓ அப்போ நாம தான் இந்தப் புள்ளைய தப்பா நினைச்சிட்டிருக்கமோ. நம்மைத் தவிர எல்லாரும் அவரைப் பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறோமோ' என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.

சிம்புவின் நாயகி:

சிம்புவின் நாயகி:

அடுத்ததாக சிம்புவின் அடுத்த படத்தில் நீதான் ஹீரோயின் என அடுத்த பொய்யை அவிழ்த்து விட்டார். அது நிஜமாக இருக்கும்பட்சத்தில் இதற்கு முன் அதனை ஏன் ஊடகங்களில் கூறாமல் சம்பந்தப்பட்ட ஐஸ்வர்யாவிடமே அவர் கூற வேண்டும். ஐஸ் மட்டுமின்றி ரித்விகாவிற்கும் புதிய படவாய்ப்பு கிடைத்துள்ளது.

ரித்துவின் அடுத்தபடம்:

ரித்துவின் அடுத்தபடம்:

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜானகியம்மாவின் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இதனை அனைத்து ஊடகங்களுமே செய்தியாக வெளியிட்டன. ஆனால் இதைப் பற்றி அவர் ரித்துவிடம் மூச்சுகூட விடவில்லை. ஆனால் வாண்டடாக ஐஸுவிடம் மட்டும் சிம்பு பட வாய்ப்பு பற்றிக் கூறினார்.

யார் இயக்குநர்?

யார் இயக்குநர்?

சிம்பு அடுத்ததாக நடிக்கவுள்ள இரண்டு படங்களிலுமே ஏற்கனவே நாயகிகள் யார் என்பது அறிவிக்கப்பட்டு விட்டது. அப்படி இருக்கையில் அவரது புதிய படம் என எதைச் சொல்கிறார் செண்டு. அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் யார்? என அடுக்கடுக்காக கேள்விகள் முளைக்கின்றன.

இது தான் திட்டமா?

இது தான் திட்டமா?

இதையெல்லாம் பார்க்கும்போது, பிக் பாஸ் சொல்லச் சொன்னதைத் தான் அன்று செண்ட்ராயனும் ஒப்பித்தாரோ என்றே தோன்றுகிறது. இதன் மூலம் சிம்புவிற்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் ஐஸ்வர்யா தான் என்ற பிம்பத்தை பிக் பாஸ் உருவாக்க முயற்சிக்கிறார் என்றே தோன்றுகிறது. இதனால் சிம்புவிற்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தின் ஓட்டுகள் ஐஸ்வர்யாவிற்கு கிடைக்கும் என்பது பிக் பாஸின் ஸ்ட்ராடஜியாக இருக்கலாம்.

பொய் தானே?

பொய் தானே?

கடந்த சீசனிலும் கூட ஓவியாவிற்காக சிம்பு குரல் கொடுத்தார். ஆனால் இம்முறை அவர் அப்படி எதுவும் ஐஸுக்காக செய்தது போல் தெரியவில்லை. அப்படி இருக்கையில் செண்டு கூறியது அப்பட்டமான பொய்யாகத் தானே இருக்க வேண்டும்.

புரியுதா மக்களே..!

புரியுதா மக்களே..!

அதோடு, மஹத் வரப்போவதில்லை, அவர் கோவாவிற்குப் போய் இருக்கிறார் என்ற பொய்யையும் செண்டு கூறினார். ஆனால் அடுத்த நிமிடமே அங்கு வந்து சேர்ந்தார் மஹத். அப்படியானால் இரண்டு பொய்களுக்கு நடுவில் செண்டு சொன்ன சிம்பு பட ஹீரோயின் மேட்டர் மட்டும் எப்படி உண்மையாய் இருக்கும் மக்களே..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X