யாஷிகாவுக்கு மட்டும் ஏன் இப்டி... சகபோட்டியாளர்கள் பொறாமை!

போன் பூத் டாஸ்கில் யாஷிகாவிற்கு மட்டும் எளிமையான டாஸ்க் அளிக்கப்பட்டுள்ளது.

By Jaya Chitra

சென்னை: மற்ற போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட டாஸ்குகளை விட மிகவும் எளிமையான டாஸ்க் அளிக்கப்பட்டுள்ளதால் யாஷிகா மீது மற்ற போட்டியாளர்கள் பொறாமை அடைந்துள்ளனர்.

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு இடையேயான ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில் போன் பூத் டாஸ்க் அளிக்கப்பட்டது. சக போட்டியாளரைக் காப்பாற்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் அளிக்கும் டாஸ்க்கை நிறைவேற்ற வேண்டும்.

இதில், செண்டுவின் முடியின் நிறம் மாற்றப்பட்டது, பாலாஜிக்கு மொட்டை போடப்பட்டது, ஐஸுவின் முடி வெட்டப்பட்டது என பலரும் உடலை வருத்திக் கொண்டு சகபோட்டியாளர்களை நாமினேசனில் இருந்து காப்பாற்றினார்கள். வழக்கம்போல, மும்தாஜ் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, ரித்விகாவைக் காப்பாற்ற மறுத்து விட்டார்.

யாஷிகாவுக்கு டாஸ்க்:

யாஷிகாவுக்கு டாஸ்க்:

இந்த டாஸ்க்கில் பாலாஜியை அடுத்த வார நாமினேசனில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால், யாஷிகா தன்னுடைய ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் பிக் பாஸிடம் கொடுத்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. யாஷிகாவும் இந்த டாஸ்க்கை ஏற்றுக் கொண்டார்.

நோ மேக்கப்:

நோ மேக்கப்:

பிக் பாஸிடம் இருந்து அவருக்கு இரண்டு சேலைகள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அணிந்து கொண்ட அவர், தன் செருப்பு உட்பட அனைத்தையும் பெட்டியில் போட்டு பிக் பாஸிடம் ஒப்படைத்தார். அலங்காரம் எதுவுமின்றி எளிமையாக பிக் பாஸ் வீட்டில் வளைய வந்து கொண்டிருக்கிறார் இவ்வாரத் தலைவியான யாஷிகா.

பொறாமை:

பொறாமை:

ஆனால், யாஷிகாவுக்கு மட்டும் ஓரவஞ்சனையாக பிக் பாஸ் சுலபமான டாஸ்கை அளித்து விட்டதால் சக போட்டியாளர்கள் பொறாமையில் உள்ளனர். காரணம் மற்ற போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட டாஸ்க்குகள் எல்லாம் உடலை வருத்திக் கொள்ளும் வகையில் இருந்தது. ஆனால், யாஷிகாவிற்கு அளிக்கப்பட்டது அப்படியில்லை.

ஓரவஞ்சனை:

ஓரவஞ்சனை:

எப்படியும் பாலாஜிக்கு மீண்டும் முடி வளர சில மாதங்கள் ஆகும். ஐஸ்வர்யாவிற்கோ சில வருடங்கள் ஆகும். ரித்விகாவுக்கோ பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் மட்டுமே பிக் பாஸ் டாட்டூவை அழிக்க முடியும். இப்படியாக மற்றவர்களுக்கு எல்லாம் கடுமையான டாஸ்க்குகளைக் கொடுத்த பிக் பாஸ் யாஷிகாவிற்கு மட்டும் எளிமையான டாஸ்கை அளித்துள்ளார்.

பார்வையாளர்களுக்கு தண்டனை:

பார்வையாளர்களுக்கு தண்டனை:

எப்போதும் நவநாகரீக உடையில் உலா வரும் யாஷிகா, சேலையில் கஷ்டப்படுவார் என பிக் பாஸ் நினைத்திருக்கலாம். ஆனால், ஏற்கனவே வேலைக்காரி டாஸ்க்கில் அவர் இதே போன்று தான் சேலையில் இருந்தார் என்பதை பிக் பாஸ் மறந்து விட்டார். அதோடு, மேக்கப் இல்லாமல் யாஷிகாவை பார்க்க வேண்டும் என்ற தண்டனையை பார்வையாளர்களுக்கு ஏன் பிக் பாஸ் கொடுத்தார் எனத் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X