பிக் பாஸ் வீட்டில் திரிஷா, நயன், ரஜினி... என்னப்பா நடக்குது அங்க?
பிக் பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் நடைபெற்றது.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் அளிக்கப்பட்டுள்ள புதிய டாஸ்கில் போட்டியாளர்கள் திரிஷா, நயன், சிட்டி ரஜினி போன்ற கதாபாத்திரங்களில் நடித்தனர்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி டாஸ்கிற்காக போட்டியாளர்கள் ஹீரோக்கள், வில்லன்கள் என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். வில்லன் அணியில் ஜனனி, ரித்விகா, மஹத், செண்ட்ராயன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் ஹீரோக்கள் அணியில் யாஷிகா, ஐஸ்வர்யா, டேனி, மும்தாஜ் மற்றும் பாலாஜி உள்ளனர்.

கெட்டப்ப மாத்தி:
இந்த ஹீரோக்கள் அணியில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அதோடு அவர்கள் நடித்த சில வெற்றிப் படங்களின் கெட்டப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன.

சிவகாமி தேவி:
இதன்படி, டேனிக்கு பாகுபலி கதாபாத்திரம். ஆனால் அவர் அமரேந்திர பாகுபலியா இல்லை மகேந்திர பாகுபலியா என்பது தெரியவில்லை. எப்போதும் சிவகாமி தேவியான மும்தாஜ் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்.

பாலாஜி:
பாலாஜிக்கு எந்திரன் சிட்டி கதாபாத்திரம். ஐஸ்வர்யாவிற்கு, யாஷிகாவிற்கும் முறையே திரிஷா, நயன் கதாபாத்திரங்கள். திரிஷாவாக விண்ணைத் தாண்டி வருவாயா சேலை கெட்டப்பில் உலா வந்தார் ஐஸ். யாஷிகா பில்லா நயன் கெட்டப்பில் வீட்டிற்குள் அங்கும் இங்கும் உலவிக் கொண்டே இருந்தார்.

சூப்பர் வில்லன்ஸ்:
சூப்பர் ஹீரோஸ் கெட்டப் தான் போட்டுள்ளனரே தவிர உப்புக்குச் சப்பாணியாக சும்மாவே இருக்கின்றனர். ஆனால் பிளாக் டி சர்ட் மட்டும் யூனிபார்மாக போட்டுள்ள சூப்பர் வில்லன்ஸ் டீம் பட்டையை கிளப்பியது. ஒவ்வொரு ஹீரோவாக டார்கெட் பண்ணி டென்சன் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

கலாய்ப்பு:
குறிப்பாக இவர்களின் அதிகம் சிக்கியது ஐஸ்ஸும், மும்தாஜும் தான். தங்கள் மனதிற்குள் இருந்த பகையை எல்லாம் இந்த டாஸ்க் மூலம் கேலி செய்து தீர்த்துக் கொண்டனர் சூப்பர் வில்லன்ஸ். ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரி டாஸ்க்கை கிண்டல் செய்தனர் ஜனனியும், ரித்விகாவும் கூட்டணி சேர்ந்து. மஹத்தோ ஒன் மேன் ஆர்மியாக மோமோவையே சுற்றி வந்து, அவரின் கேரக்டர் பற்றியும், நடிப்பு பற்றியும் கலாய்த்துக் கொண்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











