twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியில் காப்பியடிச்சது பத்தலன்னு முதல் சீசனில் இருந்துமா பிக் பாஸ்?

    By Siva
    |

    சென்னை: பிக் பாஸ் முதல் சீசனில் கொடுக்கப்பட்ட அதே டாஸ்கை இந்த சீசனிலும் கொடுத்துள்ளார்கள்.

    பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வரும் காட்சிகள் சில இந்தி நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை. கமல் ஹாஸன் கோபமாக கோட்டை கழற்றி வீசியது கூட இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பியடித்தது தான்.

    இந்நிலையில் முதல் சீசனில் கொடுத்த அதே டாஸ்கை இந்த சீனிலும் கொடுத்துள்ளார்கள்.

    போட்டியாளர்கள்

    டி சர்ட்டில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டியிருக்கும். தங்களுக்கு அளிக்கப்படும் டி சர்ட்டில் யாருடைய புகைப்படம் இருக்கிறதோ அவர்கள் போன்று நடிக்க வேண்டும். இது தான் கடந்த சீசனில் கொடுக்கப்பட்ட டாஸ்க். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவிலும் அதே டாஸ்க் கொடுக்கப்படுவதாக காண்பிக்கப்பட்டுள்ளது.

    மாத்தி யோசிங்க

    மாத்தி யோசிங்க

    காட்சிகள் காப்பி, டாஸ்க் காப்பி ஏதாவது மாத்தி யோசிங்க பிக் பாஸ். இப்படி காப்பியடிப்பதற்கு இந்தி பிக் பாஸையே டப்பிங் செய்து தமிழில் ஒளிபரப்பலாமே என்று நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள்.

    மகத்

    மகத் போன்று நடிக்கச் சொன்னால் பொன்னம்பலம் மகத்தாகவே மாறிவிட்டார். நடத்துங்க சித்தப்பு நடத்துங்க...

    யாஷிகா

    டேனி யாஷிகா போன்று நடிக்க வேண்டும். யாஷிகா டி சர்ட் அணிந்தால் தனது தொப்புள் தெரியும்படி அதை முடிச்சு போடுவார். அதை அப்படியே காப்பியடித்துள்ளார் டேனி. பிக் பாஸே காப்பியடிக்கும்போது போட்டியாளர் செய்ய மாட்டாரா என்ன?

    English summary
    A promo video of Bigg Boss 2 Tamil released today shows a task given in the first season.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X