அரண்மனைக் கிளி.. விட்டுக் கொடுத்த பிக் பாஸ்.. அப்போ சின்னத்தம்பி நிலை?
பிக் பாஸ் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் வரும் திங்கள் முதல் மாற இருப்பதாகத் தெரிகிறது. இந்த வாரம் கமல் இதனை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 90 நாட்களுக்கும் மேலாக விஜய் டிவியில் இரவு 9 மணி முதல் 10.30 வரை பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 100 நாட்கள் கணக்குப்படி இந்த நிகழ்ச்சி வரும் திங்கள் அல்லது செவ்வாயோடு நிறைவடைய வேண்டும். ஆனால், காரணம் அறிவிக்கப்படாமல் இம்முறை 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது ஒளிபரப்பு நேரத்திலும் மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது.

பிக் பாஸ் நேர மாற்றம்:
வரும் திங்கள் முதல் விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு அரண்மனைக் கிளி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. எனவே, அதன் தொடர்ச்சியாக 9.30 முதல் 11 மணி வரை பிக் பாஸ் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் அறிவிப்பார்?
ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஐந்து நாட்கள் கூடுதலாக நிகழ்ச்சி தொடரும் என அறிவித்தது போல், இவ்வார இறுதியில் இதனையும் கமலே அறிவிப்பார் எனத் தெரிகிறது.

சின்னத்தம்பி:
இதன் அடிப்படையில் பார்த்தால், தற்போது பிக் பாஸ் முடிவடைந்ததும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி சீரியலின் நேரமும் மாற்றப்பட வேண்டும். ஆனால், பிக் பாஸைப் போலவே சின்னத்தம்பி நேர மாற்ற விபரமும் இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இதுவும் நடக்கலாம்:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 நாட்கள் முடிவடைந்ததும், தினமும் ஏதாவது கொண்டாட்டங்கள் பிக் பாஸ் வீட்டில் நடைபெறலாம் எனத் தெரிகிறது. மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாகச் சென்று வர இருக்கின்றனர். இதனால் பிக் பாஸின் ஒளிபரப்பு நேரத்தை ஒரு மணி நேரமாகச் சுருக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











