இந்த வாரம் 2 பேராமே... உண்மையா பிக் பாஸ்?
இந்த வாரம் பிக் பாஸில் இருந்து இரண்டு பேர் வெளியேறப் போவதாகக் கூறப்படுகிறது.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு பேர் வெளியேறப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ் 2 தமிழ் வீட்டில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, யாஷிகா, விஜயலட்சுமி மற்றும் பாலாஜி என மொத்தம் ஏழு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் ரித்விகா, ஐஸ்வர்யா, மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் இன்று அல்லது நாளை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.

நாட்கள் குறைவு:
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 10 நாட்களே உள்ளன. கடந்த சீசனில் இறுதிச் சுற்றில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். அந்த கணக்கில் பார்த்தால் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறினால், அடுத்த வாரம் ஒருவர் வெளியேறுவார்.

மக்கள் கருத்து:
அப்படியெனில் இறுதி வாரத்தில் ஐந்து பேர் மீதம் இருப்பார்கள். எனவே, இன்று இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவல் பரவலாக உள்ளது. எப்படியும் ரித்விகாவையும், ஐஸ்வர்யாவையும் பிக் பாஸ் காப்பாற்றி விடுவார். அப்படிப் பார்த்தால் மும்தாஜும், விஜயலட்சுமியும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

ஜனனி:
ஏற்கனவே ஜனனி சுத்தி சுத்தி வந்தீங்க டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார். கடந்த சீசனில் நான்கு ஆண் போட்டியாளர்களுடன் கடைசி வாரத்தில் ஒரு பெண் போட்டியாளர் இருந்தார். பின்னர் அவர் வெளியேற்றப்பட்டார்.

பாலாஜி:
தற்போது அதே மாதிரி நான்கு பெண் போட்டியாளர்களுடன் ஒரு ஆண் போட்டியாளராக பாலாஜி இறுதி வாரத்தில் இருப்பார் என்றும், பின்னர் அவர் வெளியேற்றப்பட்டு, நான்கு பெண் போட்டியாளர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











