மகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்
Recommended Video

சென்னை: மகத்துடன் ஒப்பிடும்போது சினேகன், ஆரவ் எல்லாம் ஒன்றுமே இல்லை.
பிக் பாஸ் முதல் சீசனில் கவிஞர் சினேகன் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்தார். அதை பார்த்த பார்வையாளர்கள் இந்த ஆளு வாழ்றான்யா. ஒரு பொம்பளபுள்ளய விடாம ஓடியோடி கட்டிப்பிடிக்கிறார், மோசமான ஆள் என்று விமர்சித்தனர்.
அதிலும் குறிப்பாக சினேகன் நமீதாவை கட்டிப்பிடித்ததை பார்வையாளர்கள் இன்னும் மறக்கவில்லை.

ஆரவ்
சினேகன் பார்வையே சரியில்லை, காமப் பார்வை என்றெல்லாம் அவரை பார்வையாளர்கள் திட்டினார்கள். மீம்ஸ் போட்டு கலாய்த்தார்கள். ஆரவ் சும்மா கடலை போட்டதற்கே அவர் ஏதோ செய்யக் கூடாத குற்றத்தை செய்தது போன்று விமர்சித்தார்கள்.

ஒன்றுமே இல்லை
பிக் பாஸ் 2 சீசனில் மகத் செய்யும் வேலைகளை எல்லாம் பார்த்த பார்வையாளர்களுக்கு சினேகனும், ஆரவும் உத்தமர்களாக தெரிகிறார்கள். தேவையில்லாமல் அவர்களை திட்டிவிட்டோமோ என்று நினைக்கிறார்கள்.
ஆசிரியர்
பிக் பாஸ் 2 வீட்டில் லக்சுரி டாஸ்கிற்காக போட்டியாளர்கள் பள்ளி மாணவர்கள் போன்று நடிக்கிறார்கள். அவர்களுக்கு ஆசிரியராக சினேகன் வருவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

மகிழ்ச்சி
பிக் பாஸ் 2 வீட்டில் சினேகனை பார்த்த பார்வையாளர்கள் நீ நல்லவன்யா, தேவையில்லாமல் உன்னை திட்டிவிட்டோம். அந்த பய மகத்துடன் மட்டும் சேராதீர்கள் என்கிறார்கள்.
லூஸ்
கனா காணும் காலங்களில் வரும் மாணவர்கள் போன்று நடிக்கச் சொன்னால் பிக் போஸ் போட்டியாளர்களோ லூசு மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











