யாஷிகாவுக்கு பதில் போர்ஷிகாவா?: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்
Recommended Video

சென்னை: போர்ஷிகாவால் பிக் பாஸ் வீடு அழுகாச்சி வீடாக மாறியது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று நித்யா வெளியேற்றப்பட்டார். யாஷிகாவை வெளியேற்ற ஓட்டு போட்டவர்கள் நித்யாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பிக் பாஸே முடிவு எடுத்தால் நாங்கள் எதற்கு ஓட்டு போட வேண்டும் என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் குமுறினார்கள்.

அழுகை
பார்வையாளர்கள் கொந்தளித்தபோது நித்யா-பாலாஜியின் மகள் போர்ஷிகாவை வரவழைத்து அனைவரையும் எமோஷனலாக்கி அழ வைத்துவிட்டார் பிக் பாஸ். அழுது கண்ணீரை துடைத்த கையோடு மீண்டும் பிக் பாஸை திட்டத் துவங்கிவிட்டனர் பார்வையாளர்கள்.

மகள்
மகள் போர்ஷிகாவை பார்த்ததும் பாலாஜி அழுதார். ஹாய், எப்படி இருக்கீங்க, சாப்பிட்டீங்களா என்று போர்ஷிகா பாலாஜியை கேட்க முதல் ஆளாக அழுதது வெஷ பாட்டில் ஜனனி தான். அதன் பிறகு பாலாஜி அழுததை பார்த்த போர்ஷிகா அழுவாதீங்க என்றார்.

அழுகாச்சிடே
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே மும்தாஜ் அழுகிறார். போட்டியாளர்கள் கிளம்பி போவதை பார்த்து அழத மும்தாஜ் இந்த வாரம் போர்ஷிகாவின் பாசத்தை பார்த்து கண்ணீர் சிந்தினார். சன்டே வந்தாலே எங்க செல்லத்தை அழ வைக்கிறீங்களே என்று மும்தாஜ் ஆர்மி கவலைப்படுகிறது.

முத்தம்
தந்தை பாலாஜி லவ் யூ சொல்ல போர்ஷிகா பதிலுக்கு லவ் யூ டூ சொன்னார். மேலும் தந்தைக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார். யாஷிகாவை காப்பாற்றிவிட்டு போர்ஷிகாவை வைத்து பிக் பாஸ் நாடகமாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எமோஷனல்
போன வாரம் டேனியின் தந்தையால் எமோஷனலாகி கண் கலங்கினார் கமல். இந்த வாரம் பாலாஜி குடும்பத்தை பார்த்து கண் கலங்கினார். பாலாஜி சார்பில் போர்ஷிகாவை தூக்கி முத்தம் கொடுத்தார் கமல்.

ஏமாற்ற முடியாது
என்ன தான் எமோஷனல் காட்சிகளை காட்டி எங்களை அழ வைத்தாலும் நீங்கள் செய்தது குற்றமே என்கிறார்கள் பார்வையாளர்கள். அந்த கோபத்தை அவர்கள் சமூக வலைதளங்களில் காட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











