ரித்விகா பற்றி மஹத் சொன்னது நூத்துக்கு நூறு சரி!
ரித்விகாவின் பேச்சு மற்றும் நடவடிக்கைகள் தமிழ்ப் பெண்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது மஹத் கூறியது போல், தமிழ்ப் பெண்களின் பிம்பமாகவே இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் நடிகை ரித்விகா.
நிதானமான, திறமையான போட்டியாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ரித்விகா. அதிகம் சர்ச்சைகளில் சிக்காமல், தொடர்ந்து சக போட்டியாளர்களிடம் நல்ல பெயரைப் பெற்று வருகிறார்.
மஹத் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போது கூட, 'ரித்விகா தான் உண்மையான தமிழ்ப் பொண்ணு’ எனப் பாராட்டினார்.

விமர்சனம்:
இது மஹத்தின் கருத்து மட்டுமல்ல. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பலரது விமர்சனமும் இது தான். மற்ற சில பெண் போட்டியாளர்களைப் போல் அவர் ஆபாசமாக உடை அணிவதில்லை, அதிகம் ஆங்கிலம் பேசுவதில்லை.

ரித்விகாவின் பதில்:
இது மட்டுமின்றி அவ்வப்போது அவர் பேசும் சில வார்த்தைகள், பெரும்பாலான தமிழ்ப் பெண்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு, நேற்று நாமினேசனின் போது மும்தாஜிடம் பேசிய ரித்விகா, "எங்க வீட்ல காலைல எழுந்திருச்சதும், நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் குட்மார்னிங் சொல்லிக்க மாட்டோம்.

அன்பை பரிமாறும் முறை:
யாரையும் கட்டிப் பிடிச்சுக்க மாட்டோம். ஆனா எங்களுக்குள்ள எப்பவுமே அன்பு இருக்கும். சின்னப் பிள்ளையா இருந்தப்போ எங்க அம்மா என்னைக் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சிருக்காங்க. நானும் அவங்களைக் கட்டிப் பிடிச்சிருக்கேன்.

குழந்தை வளர்ப்பு:
ஆனா, இப்போ முப்பது வயசாகுது எனக்கு. பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் எங்க அம்மாவை நான் கட்டிப் பிடித்தேன்" என தான் வளர்ந்த விதம் குறித்து கூறினார். இதேபோல், அன்றொரு நாள் தன் வீட்டில் இருந்து வந்த கடிதத்தைப் படித்த ரித்விகா, ‘தன் அப்பா தன்னை வீட்டுக்குள் வைத்து பொத்திப் பொத்தி வளர்த்ததாகவும், அதனால் இந்த வீட்டில் ஆரம்பத்தில் அதிகம் கஷ்டப்பட்டதாகவும்' குறிப்பிட்டிருந்தார்.

பெற்றோர்களின் மனநிலை:
இது ரித்விகாவுக்கு மட்டுமல்ல. பெரும்பாலான தமிழ்க் குடும்பங்கள் இப்படித் தான் இருக்கின்றன. பாசத்தை உடல்மொழியில் காட்டாமல் மறைத்து வைத்து வாழும் சமூகம் நம்முடையது. பிள்ளைகளை வெளியில் விடாமல், பாதுகாப்பதாகக் கருதி பொத்தி பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள் இங்கு அதிகம்.


Click it and Unblock the Notifications











