காசுக்காக சேர்ந்த கூட்டம் இல்ல... இது ‘ரித்விகா’வுக்காக தானா சேர்ந்த கூட்டம்!
Recommended Video

சென்னை: பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளர் யார் என்பது நாளை தெரிந்து விடும்.
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் சீசன் 2. நாளை இதன் கிராண்ட் பினாலே ஒளிபரப்பாக இருக்கிறது. மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று ரித்விகா தான் இந்தப் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், எவிக்சனில் போங்கு செய்து ஐஸ்வர்யாவைக் காப்பாற்றியது போல, கடைசி நேரத்தில் ஐஸ்வர்யாவின் கைக்கு பட்டம் மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பிக் பாஸின் முடிவே இறுதியானது.
இது ஒருபுறம் இருக்க, சமூகவலைதளங்களில் ஐஸ் ஆர்மி, ரித்விகா ஆர்மி என ஆளாளுக்கு தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்காக மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.
இதோ அதில் சில...

தானா சேர்ந்த கூட்டம்:
பிக் பாஸ் சீசன் 2வில் மக்களிடையே நல்ல பெயரைப் பெற்றுள்ளவர் ரித்விகா. இது அவருக்காக தானா சேர்ந்த கூட்டமாம்.

பாவம் பிக் பாஸ்:
பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக ஷாரிக் வந்ததால் ஐஸ்வர்யா மகிழ்ச்சி அடைந்தார். அதைப் பார்த்து பிக் பாஸ் ரியாக்சனாம் இது.

இது ஜனனி வெர்சன்:
வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்து பைனலுக்கு வந்து விட்டார் விஜி. இதில் பட்டத்தை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை வேறு அவருக்கு.

வேற லெவல்:
ரித்து தான் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டால், ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகர்கள் பாகுபலி 2வில் வரும் இக்காட்சி போல் தான் ஆரவாரம் செய்வார்களாம். இதெல்லாம் ரொம்ப ஓவரு.


Click it and Unblock the Notifications











