twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸில் சண்டை சண்டை சண்டையோ சண்டை சண்டைக்கெல்லாம் சண்டை

    By Siva
    |

    Recommended Video

    நிஜ வில்லி மும்தாஜா? இல்ல ஜனனியா?- வீடியோ

    சென்னை: எங்களின் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கிறது பிக் பாஸ், ரொம்ப சோதிக்கிறீர்கள்.

    பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்க்க தனி பொறுமை தேவைப்படுகிறது. அதான் பொறுமை தேவைப்படுகிறது என்று சொல்கிறீர்கள் அல்லவா உங்களை யார் பார்க்கச் சொன்னது என்று கேட்கலாம்.

    நிகழ்ச்சியை பார்த்தால் தானே பாஸ் உங்களுக்கு எல்லாம் தகவல் சொல்ல முடியும்.(ஒரு ஆணியும் புடுங்கவே வேண்டாம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

    டாஸ்க்

    டாஸ்க்

    பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்குகள் கொடூர மொக்கையாக உள்ளன. கமல் ஹாஸன் வரும் நாட்களில் கூட நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என்றே விமர்சனம் எழுந்துள்ளது. கமல் பேசும் அரசியலை கேட்க பலர் வார இறுதி நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். சில நேரம் அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் கமல் பேசுவதை தாங்க முடியவில்லை. உண்மை தான் கமல் சார்.

    பார்வையாளர்கள்

    பார்வையாளர்கள்

    பிக் பாஸ் போட்டியாளர்களை எப்பொழுது பார்த்தாலும் மோத விட்டு, புறம் பேச விட்டால் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று யாரோ ஒரு அறிவுஜீவி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தவறாக சொல்லியிருப்பார் போன்று. எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருந்து நம்மை கடுப்பேற்றுகிறார்கள்.

    முடியல

    முடியல

    போட்டியாளர்கள் தொடர்ந்து மோதிக் கொள்வதை பார்த்தால் நேரில் சென்று நாலு சாத்து சாத்த வேணடும் போன்று உள்ளது. கமல் ஹாஸனாவது ஏன்யா இப்படி சின்னப்புள்ளத்தனமா நடந்து பார்வையாளர்களின் காதுகளில் ரத்தம் வர வழைக்கிறீர்கள் என்று கேட்பார் என பார்த்து அவரும் நம்மை ஏமாற்றிவிட்டார்.

    ஜனனி

    ஜனனி

    டேனியையே திரும்பத் திரும்ப காட்டி கடுப்பேற்றுகிறார்கள். மும்தாஜை ஏதோ பெரிய வில்லி ரேஞ்சுக்கு காட்டுகிறார்கள். வெஷ பாட்டில் ஜனனி ட்ரிக்கர் செய்துவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார். அய்யோ நல்லா இருப்பீங்க பிக் பாஸ், காலையில் பாட்டு போட்டு எழுப்பும்போது அந்த வெஷ பாட்டில் முகத்தை பக்கத்தில் காட்டுவதை நிறுத்துங்க. முடியல.

    யாஷிகா

    யாஷிகா

    ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் கொஞ்சி கொஞ்சி பேசுவதை பார்த்து ரசித்த காலம் போய் அவர்களை பார்த்தாலே பத்திண்டு வருகிறது. சண்டை போட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்காக போட்டியாளர்கள் சண்டை போடுவது போன்று தெரிகிறது. கவர்ச்சியும், சண்டையும் தான் உங்களின் ஆயுதமா பிக் பாஸ்? இரண்டுமே கை கொடுக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

    English summary
    Bigg Boss 2 Tamil contestants are seen fighting all the time which is really really irritating. Viewers have already lost the patience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X